செய்திகள்

அரசாங்கத்தின் ஆயுதங்களை தனியாருக்கு வழங்கிய கோத்தாவின் நிறுவனம்

கோத்தபாயாவின் பாதுகாப்பு நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு அரசசட்டத்ததரணிகள் குழுவொன்றை சட்டமா அதிபர் நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

முன்னைய அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்றஊழல்கள், முறைகேடுகள்,சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் நாளாந்தம் வெளிவந்தவண்ணமுள்ளன.

இதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றிற்கும்,தனியார் நிறுவனமொன்றிற்கும் இடையிவான சர்ச்சைக்குரிய தொடர்பு பல அதிர்ச்சி தரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் தற்போது சட்டமா- அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளனர்.

ரக்னா ஆரக்சா லங்கா நிறுவனத்திற்கும் அவன்ட் கார்டேமரிடைம் சேர்விஸ் நிறுவனத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து தீவிரமாக ஆராயவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாக சட்ட நிபுணர்கள் குழுவொன்றை இது குறித்து ஆராயுமாறு சட்டமாஅதிபர் பணித்துள்ளார்.

அடுத்த வாரம் தனது விசாரணைணை ஆரம்பிக்கவுள்ள குறிப்பிட்ட குழுவினர் இலங்கை அரசாங்கத்திற்கு தன்னிடமுள்ள ஆயுதங்களை தனியார் நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கு சட்டத்தில் இடமுள்ளதா என ஆராயவுள்ளனர் .
ரக்னா ஆரக்சகா லங்கா நிறுவனம் முன்னாள் பாதுகாப்பு செயலாளருடையது. குறிப்பிட்ட நிறுவனம் தன்னுடைய வருமானங்கள் குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியா என்பது தெரியவரவில்லை,

எனினும் இந்த நிறுவனம் அரசாங்கபணத்தையும், அரசாங்க வளங்களையும் பயன்படுத்தியுள்ளது.தற்போது பலத்த சர்ச்சையில் சிக்கியிருக்கும் பிரதம நீதியரசர் உட்பட முன்னைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த நிறுவனம் பல அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கான ஓப்பந்தத்தை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் உணவுவழங்கும்சேவைகள்,ஹோட்டல்கள் போன்றவற்றையும் நடத்திவந்துள்ளது.