செய்திகள்

அரசாங்கத்தின் பழிவாங்களுக்கு இலக்கானவர்களுக்காக எதிர்க்கட்சியினால் “கண்ணீர் வேண்டாம்” அமைப்பு ஆரம்பம்

எதிர்க் கட்சியினரின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பழிவாங்கல்களுக்கு இலக்கான அரச மற்றும் தனியார் துறையினருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கவென எதிர்க் கட்சியினால்  “கண்ணீர் வேண்டாம்” என்ற பெயரில் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார , பந்துல குணவர்தன , காமினி லொக்குகே மற்றும் ஜானக வக்கும்புர ஆகியோர் இந்த அமைப்பின் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி தற்போதைய அரசாங்கத்தினால் பழிவாங்கல்களுக்கு இலக்கான மற்றும் தொழில் வாய்ப்புகளை இழந்த அரச மற்றும் தனியார் துறையினர் இருப்பின் அவர்கள்  இணைப்பாளர்கள் , டீ15 , கண்ணீர் வேண்டாம் , பாராளுமன்ற உறுப்பினர்கள் வீட்டுத் தொகுதி , மாதிவெல. என்ற முகவரிக்கு தகவல்களை அனுப்பி வைக்குமாறு அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தினால் கடந்த சில மாதங்களில் அரச மற்றும் தனியார் துறையில் இலட்சக் கணக்கான ஊழியர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்படி பலர் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளதுடன் மேலும் பலர் இடமாற்றங்களுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனால் அவ்வாறாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவும் வகையில் நாம் புதிய அமைப்பொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம். இந்த அமைப்பினூடாக பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை பெற்று ஜனாதிபதியூடாக அவர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.