செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக சதிப்புரட்சியொன்றில் ஈடுபடுவதற்கு தேவையான பலம் அவன்கார்டே நிறுவனத்திடமுள்ளது- அனுரகுமரா திசநாயக்க

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சதிப்புரட்சியொன்றில் ஈடுபடுவதற்கு தேவையான அனைத்து பலமும் அவன்கார்டே நிறுவனத்திடம் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஜே.வி;பி தலைவர் அனுரகுமார திசநாயக்க விசாரணைகளில் தலையிடுவதற்கும், உண்மைகளை மூடி மறைப்பதற்கும் அமைச்சர்கள் உட்பட அரசாங்கத்தை சேர்ந்த பல முயல்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சிலோன் ருடேயிற்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

அவன்ட்கார்டே நிறுவனம் குறித்த விபரங்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும், காலி கடலிலும் ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே தெரியவந்தது.

குறிப்பிட் நிறுவனத்தினத்திடம் பணபலமும்,ஆயுதங்களும், ஓய்வுபெற்ற திறமைiயான இராணுவ அதிகாரிகளும் உள்ளனர்.இதன் மூலமாக அவர்கள் தங்களுடைய நடவடிக்கைகளுக்காக சிலரை வளைத்துப்போட்டுள்ளனர்.அரசியல்வாதிகள் மாத்திரமல்ல சில அதிகாரிகளும் இதில் தொடர்புபட்டுள்ளனர்.
இதனால் மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதில் அரசாங்கம் எவ்வளவு தூரம் வெளிப்படை தன்மையுடனும்,நேர்மையுடனும் செயற்படுகின்றது என்பதற்கு இந்த நிறுவனத்தின் மீதான நடவடிக்கைகள் அமில பரீட்சையாக அமையப்போகின்றன
குறிப்பிட்ட நிறுவனம் சரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டதா அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதா என்பது குறித்து தீர்மானிக்கும் பொறுப்பை நான் எடுக்க முடியாது.
எனினும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சதிப்புரட்சியொன்றில் ஈடுபடுவதற்கு தேவையான அனைத்து பலமும் அந்த நிறுவனத்திடமுள்ளது.தனியார் நிறுவனமொன்று இவ்வளவு அதிகாரங்களை வைத்திருப்பதற்கு அனுமதிக்க முடியுமா என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதித்துறையின் கடமை.பணம் உட்பட வேறு எந்த சலுகைக்காகவும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் தலையிடவேண்டாம் என்பதையே நான் வலியுறுத்தவிரும்பு கிறேன்.
குறிப்பிட்ட நிறுவனம் குறித்து நடைபெறும் நீதிமன்ற விசாரணைகளில் தலையிடவேண்டாம் என்றே நான் தெரிவிக்கிறேன்.
கிராமத்தவர் ஒருவரிடம் வழமைக்கு மாறான ஆயுதங்கள்இருந்தால் அது குறித்த விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது எனக்கு தெரியும்.
ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.குறிப்பிட்டநிறுவனம் ரக்னா ஆரக்சா லங்கா நிறுவனத்துடன் ஓப்பந்தம் செய்துள்;ளது. கடல் பாதுகாப்பு நிறுவனமொன்றிற்கு படைவீரர்களை வழங்குவதற்கான அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினர் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்;த தருணத்தில் அந்த நிறுவனம் சரியான விதத்தில் செயற்பட்டுள்ளது என அமைச்சர் ஒருவர் தெரிவிக்கின்றார்.நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்லவும் அவ்வாறு தெரிவிக்கின்றார்.
பிரதம மந்திரியால் நியமிக்கப்பட்ட ஊழலுக்கு எதிரான குழுவின் தலைவர் திலக்மாரப்பன அவன்ட் கார்டே நிறுவனத்தின் சார்பில் ஆஜராகின்றார்.
குறிப்பி;ட் நிறுவனத்தின் தலைவரின் கடவுச்சீட்டை விடுவிப்பதற்காக அமைச்சர் தலையிட்டார் என சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தெரிவி;க்கின்றனர்.நிறுவன தலைவர் வெளிநாடு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எழுத்து மூவ அனுமதியை வழங்கியுள்ளார்.இவை அனைத்தும் விசாரணையில் தலையீடு செய்யும் நடவடிக்கைகளே. ஏன அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.