செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் கூறப்பட்ட உறுதிமொழிகள் பல இன்னும் நிறைவேற்றப்படாதிருக்கும் நிலையிலேயே அதற்கு எதிராக போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களின் மகபொல புலமை பரீசில் கொடுப்பணவு இன்னும் அதிகரிக்கப்படாமை , தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமை , அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை வழங்காமை உட்பட வரவு செலவுத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட பல விடயங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமை அத்துடன் 100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்படாமை , தகவல் அறியும் சட்டம் நிறைவேற்றப்படாமை , தேசிய ஔடத கொள்கையை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட விடயங்கள் நிறைவேற்றப்படாமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இந்த போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.