செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக நாளை முதல் ஜே.வி.பி வீதிக்கு இறங்கும்

அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி நாளை முதல் வீதிக்கு இறங்கி போராட்டங்களை நடத்தவுள்ளது.
இதன்படி நாளை பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தப்படவுள்ளதுடன் இதனை தொடர்ந்து நாடெங்கிலும் எதிர்வரும் நாட்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படாமை , 100 நாள் திட்டத்தில் கூறப்பட்ட வேலைத்திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமை போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
இதேவேளை தொழிலார் உரிமைகளை பாதுகாக்க கோரி எதிர்வரும் வார்களில் தொழிற் சங்கங்களை ஒன்றிணைத்து போராட்டங்களை நடத்தவும் ஜே.வி.பி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.