செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்க மஹிந்த அணியினர் திட்டம்

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கி போராட்டங்களை நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான அணியினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி எதிர்வரும் நாட்களில் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களையும் , பேரணிகளையும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் மற்றும் 20வது திருத்தத்தை நிறைவேற்றுமாறு கோரியுமே இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.