செய்திகள்

அரசின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு: மைத்திரியை நேரில் சந்தித்து தெரிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவைத் தெரிவித்திருக்கின்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரதிநிதிகளின் தூதுக்குழு ஒன்று ஜனாதிபதி மைத்திரியை நேற்று மாலை சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும, அனுர பிரயதர்சன யாப்பா ஆகியோரே புதிய ஜனாதிபதியை அவரது செயலகத்தில் சந்தித்துப் பேசினார்கள்.

அரசாங்கம் தமது 100 நாள் வேலைத் திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள், அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமது ஆதரவு கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.