செய்திகள்

அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் குறித்து இணக்கப்பாடு

தேர்தல் முறை மாற்றத்துடனான அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவர ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சித் தலைவர்கள் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று மாலை குறித்த சந்திப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போதே இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக வாசுதேவ நாணயக்கார மேலும் கூறியுள்ளார்.