செய்திகள்

அரசியலமைப்பு சபைக்காக 4 பேர் நியமனம்

19வது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் அமைக்கப்படவுள்ள அரசியலமைப்பு சபைக்கான நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்க , பிரதமரின் பிரதிநிதியாக அமச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ , எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதயாக ஜோன் செனவிரட்ன மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதியாக ஆர்.சம்பந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அரசியலமைப்பு சபை முழுமைப்பெற இன்னும் மூன்று பேர் நியமிக்கப்பட வேண்டும். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் இணக்கப்பாட்டுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.