செய்திகள்

அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வட பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் “புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளும் மக்களின் எதிர்பார்ப்புகளும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கும் கலந்துரையாடலும் எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் இல.62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி, கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை, இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வே.மகேந்திரனின் தலைமையில் இடம்பெறவுள்ள இக் கருத்தரங்கில், விசேட கருத்துரைகளை புதிய ஜனநாயக மாக்சிச, லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்தில்வேலும் அரசியல் ஆய்வாளர் தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கா ஆற்றவுள்ளனர். உரைகளைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

n10