செய்திகள்

அரசியலில் குதிக்க கோத்தபாய முடிவு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச அரசியலில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக தற்போதுள்ள அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவதற்கு எனக்கு யோசனை இல்லை. பல காரணங்களுக்காகவும் பலரின் வேண்டுகோளிற்காகவும் இறுதியாக அரசியலுக்கு வரத் தீர்மானித்துள்ளேன்.

ஏப்படியிருப்பினும் அரசியலுக்கு வருவதற்கான கட்சியை நான் இதுவரை தீர்மானிக்கவில்லை.

ஏதாவது ஒரு வகையில் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டுமென்பதுடன் அதிகாரி என்ற ரீதியில் அதனை என்னால் செய்ய முடியும் எனவும் நான் நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.