செய்திகள்

அரசியல்வாதிகளே நீதிபதிகளாக செயற்பட்டுள்ளனர் என்கிறார் நீதி அமைச்சர்

இலங்கையில் சில நீதிபதிகள் அரசியல் நியமனங்களாக நீதிபதியாகியுள்ளனர். அரசியல்வாதிகள் நீதிபதிகளாக செயற்பட்டுள்ளனர்.

சில வேளைகளில் அரசியல்வாதியே அவரது கடமையை செய்யும் அளவுக்கு இடமளி த்துள்ளனர். இது கடந்த கால விதி. இந்நிலை தொடர்ந்தால் ஜனநாயகம் கனவாகிவிடும்.

மக்கள் நீதித்துறை மீது வைத்திரு ந்த 25% நம்பிக்கையை 90% ஆக மாற்றியமத்துள்ளோம்.

நாட்டின் கொள்கை, நீதிக்கு அமைய நீதிபதிகள் செயற்பட்டால் மட்டுமே நீதித்துறை சுதந்திரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் .

இவ்வாறு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.  உடுகம பிரதேசத்தில் நடந்த கூட்டமொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.