செய்திகள்
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நேற்று வியாழக்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சம உரிமைகள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன் இதில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் , சிவில் செயற்பாட்டாளர்கள் , இடதுசாரி கட்சியினர் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பதாதைகளை ஏந்தி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.