செய்திகள்

அரசியல் படத்தில் களமிறங்குகிறார் ஆர்யா

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஷாம் ஆகியோருடன் இணைந்து ஆர்யா நடித்திருக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுடைமை’ படம் வரும் மே 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இதுதவிர ஆர்யா தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‘யட்சன்’, அனுஷ்காவுடன் இணைந்து ‘இஞ்சி இடுப்பழகி’ என ஒரே நேரத்தில் 3 படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, ஜெயம் ரவியின் ‘ரோமியோ ஜூலியட்’, விஷ்ணுவின் ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்து வருகிறார் ஆர்யா. இந்நிலையில் இயக்குனர் ஜீவா சங்கர் சமீபத்தில் ஆர்யாவை சந்தித்து கதை ஒன்றை கூறியிருக்கிறாராம்.

அரசியல் தொடர்பான அக்கதை ஆர்யாவுக்கு மிகவும் பிடித்துப் போகவே அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜீவா சங்கர் ஏற்கெனவே ஆர்யாவின் தம்பி சத்யாக்கி ‘அமர காவியம்’ என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு ஜீவா சங்கர் இயக்கும் படத்தில் ஆர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.