செய்திகள்

அரசியல் பயணம் தொடருமா? இல்லையா? மே தினத்தன்று மஹிந்த அறிவிப்பார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பான அறிவிப்பை மே தினத்தன்று வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அவர் தரப்பு ஆதரவு கட்;சிகள் இணைந்து கிருளப்பனையில் நடத்தவுள்ள மே தின கூட்டத்தில் கலந்துக்கொண்டு அவர் அது தொடர்பான அறிவிப்பை விடுக்கவுள்ளதாக தெரிய வருகின்றது.
இருப்பினும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்;சியினால் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடத்;த திட்டமிடப்பட்டுள்ள மே தினக் கூட்;டத்திற்கான அழைப்பு கடிதம் மஹிந்தவிடம் கையளிக்கப்பட்டுள்ள போதும் அந்த அழைப்பு தொடர்பாக பதில் எதனையும் அவர் இது வரை கூறவில்லை.
இந்நிலையில் மஹிந்த அடிக்கடி சென்று அரசியல் சந்திப்புக்களை நடத்தி வரும் அபயாராம விகாரையில் மே தினக் கூட்டம் தொடர்பாக தனக்கு ஆதரவான கட்சியினருடன் அவர் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக தெரிய வருகின்றது.