செய்திகள்

அரசியல் பழிவாங்கல்களை விடுத்து 100 நாள் திட்டத்தை முன்னெடுங்கள்: மகிந்த ராஜபக்ச கோரிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வாக்களித்த சிலர் அரசாங்கத்தின் தொந்தரவுகளுக்கும் இடைஞ்சல்களுக்கும் உள்ளாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹோரணை மதுராவல பிரதேச சபைக்கு முன்னால் கூடிய மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

திருமணம் ஒன்றுக்கு செல்லும் வழியில் அவர் பிரதேச சபைக்கு விஜயம் செய்தார்.அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இவர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் தொழில்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் வெறுப்படைந்துள்ளனர்.

இந்த அரசியல் பழிவாங்கலையும், மக்களை பழிவாங்குவதையும் நிறுத்தி விட்டு செயற்படுமாறு அவர்கள் எதிர்பார்த்த 100 நாள் வேலைத்திட்டத்தை செயற்படுத்துமாறு கோருவதாகவும் மகிந்த ராஜக்ச குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அங்கு பேசிய முன்னாள் ஜனாதிபதி, கண்டியில் நடைபெறுவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவான மக்கள் கூட்டம் எனவும் அதனை மிரட்டல்கள் மூலம் நிறுத்த முடியாது எனவும் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திற்கு எதிராக எவரும் தற்போது குரல் கொடுப்பதில்லை எனவும் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்கள் மாத்திரமே அரசாங்தக்திற்கு எதிராக குரல் கொடுப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.