செய்திகள்

அரசியல் மாற்றத்துக்கான சூழலை சந்திரிகாவே உருவாக்கினார்: நிட்டம்புவ கூட்டத்தில் மைத்திரி

ஜன­வரி எட்டாம் திகதி இந்த நாட்டில் ஏற்­பட்ட மாற்­றத்­துக்­கான சூழலை முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவே உரு­வாக்­கினார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நான் அர­சாங்­கத்தை விட்டு வெளியேறும் முன்னர் ஒரு தடவை கூட ரணில் விக்கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து பேசி­ய­தில்லை. வெளியேறு­வ­தற்கு மூன்று நாட்­க­ளுக்கு முன்னர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுடன் நான் ஐந்து நிமி­டங்கள் தொலை­பே­சியில் பேசினேன். அவ்­வ­ள­வுதான் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

ஜனா­தி­பதி மைத­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­காக வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு நன்றி கூறும் பொதுக் கூட்டம் ஒன்று நேற்று நிட்­டம்­பு­வவில் நடை­பெற்­றது. அந்த கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மேற்­கண்ட்­வாறு குறிப்­பிட்டார்.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தலை­மையில் நடந்தக் கூட்­டத்தில் அமைச்­சர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மாகாண சபை உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­டனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில் முக்கியமாகக் கூறியதாவது:

ஐக்­கிய தேசிய கட்­சியும் சுதந்­திரக் கட்­சியும் இன்று பாரிய வேலைத்­திட்டம் ஒன்றை செய்ய தயா­ராக இருக்­கின்­றன. புதிய அத­ர­சியல் கலா­சா­ரத்தை மு்னனெ­டுக்க தயா­ராக இருக்­கின்றோம். இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய கட்­சியின் வாக்­கு­களை பெற்று ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட நான் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எந்த கட்­சியின் மேடையில் நிற்பேன் என்று கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­றனர்.

ஆனால் நான் ஒரு­வி­ட­யத்தை கூறு­கின்றேன். அதா­வது எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நான் எந்த அர­சியல் கட்­சியின் மேடையில் நிற்­கப்­போ­கின்றேன் என்­பது முக­கி­யமா? அல்­லது ஜன­வரி எட்டாம் திகதி ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது நாங்கள் முன்­வைத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வது முக்­கி­யமா? இத­னையே நான் அவர்­க­ளுக்கு பதி­லாக கூறு­கின்றேன்.

அதா­வது நாளைய சவால்­க­ளுக்­காக இன்­றைய செயற்­பா­டு­களை தடை­யா­கக்­கொள்­ளக்­கூ­டாது. மேலும் இன்­றைய செயற்­பா­டு­களை நாளைய சவால்­க­ளுக்­கான தடை­யா­கவும் முன்­னெ­டுக்­கக்­கூ­டாது. மாற்­றத்தை செய்­வது எவ்­வாறு என்று பார்ப்போம்.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா எவ்­வா­றான அர்ப்­ப­ணிப்பை வழங்­கினார் என்­பது இர­க­சி­ய­மல்ல. கடந்த வருடம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நான் அர­சாங்­கத்தை விட்டு விலகும் முன்னர் ஒரு தடவைக் கூட ரணில் விக்­ர­ம­சிங்­கவை சந்­தித்து பேசி­ய­தில்லை. வில­கு­வ­தற்கு மூன்று நாட்­க­ளுக்கு முன்னர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் நான் ஐந்து நிமி­டங்கள் தொலை­பே­சியில் பேசினேன்.

அந்­த­வ­கையில் கடந்த ஜன­வரி எட்டாம் திகதி இந்த நாட்டில் ஏற்­பட்ட மாற்­றத்­துக்­கான சூழலை முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவே உரு­வாக்­கினார். எனவே புதிய அர­சாங்­கத்தின் 100 நாள் திட்­டத்தை முன்­னெ­டுக்க நாட்டு மக்கள் சகோ­த­ரத்­து­வத்­துடன் முன்­வ­ர­வேண்டும். புதிய நாட்டை கட்­டி­யெ­ழுப்பி சமூக மாற்­றத்தை நாம் ஏற்­ப­டுத்­துவோம்.

நல்ல மனி­தர்கள் மௌன­மாக இருப்­பதே சிறந்த மாற்றம் உரு­வா­காமல் இருப்­ப­தற்கு பாரிய கார­ண­மாக உள்­ள­தாக அமெ­ரிக்க நிற­வெ­றிக்கு எதி­ராக போரா­டிய தலைவர் கூறி­யுள்ளார். கடந்த எட்டாம் திகதி தேர்­தலில் இந்த நாட்டின் நல்ல மனி­தர்கள் எழுந்­தனர். கடந்த அர­சாங்­கத்­துடன் மோதும் சக்தி எமக்கு இருக்­க­வில்லை. என்­று­மில்­லா­த­வாறு அரச ஊட­கங்கள் பக்­கச்­சார்­பாக செயற்­பட்­டன. மிகவும் அசுத்­த­மான தேர்­த­லாக எட்டாம் திகதி தேர்­தலை குறிப்­பி­டலாம். ஆனால் எமது தேர்தல் பிர­சா­ரத்தை மக்­களே செய்­தனர். இளைஞர் யுவ­தி­களே மாற்­றத்­துக்­கான அடித்­த­ளத்தை இட்­டனர். வெற்­றியின் நம்­பிக்கை மக்­க­ளுக்கு இருந்­தது.

5-1

4-1

3

1

00