செய்திகள்

அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டாம் என்று மஹிந்த வேண்டுகோள்

அரசியல் பழிவாங்கல்கள் எதனையும் செய்ய வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ புதிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த இரு தினக்களுக்கு முன்னர் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டமையானது மஹிந்த ராஜபக்ஸ தேர்தலின் பின்னர் ஒரு சதித்திட்டத்தை தீட்டியிருந்தார் என்பதையே காட்டுவதாக கருதப்படும் நிலையில் ராஜபக்ஸ இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்சவின் ரக்ன லங்கா என்ற பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமானது கூறப்படுகிறது.