அரசியல் ஸ்திரதன்மை நிலவுவது தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணம் – பிரதமர் மோடி!
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றடைந்துள்ளார். பாதுகாப்பு, எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாக உள்ளன.
சவுதிஅரேபியா சென்றுள்ள பிரதமர் ரியாத்தில் உள்ள இந்திய வம்சாவழியினரிடையே சிறிது நேரம் உரையாற்றினார். குறுகிய காலத்தில் உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இந்தியா உள்ளாகியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இதற்கு காரணம் இந்தியாவின் பொருளதார வளர்ச்சிதான் என குறிப்பிட்ட பிரதமர், இளைஞர்கள் தான் இந்தியாவின் பலம் என்று தெரிவித்தார். வேளாண்துறை, தொழில்துறை போன்றவற்றில் இந்தியா மிகப்பெரிய அடிகளை எடுத்து வைத்திருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
N5