Search
Thursday 24 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம், ராஜபக் ஷவிடம் கோரும் ஆதரவு

அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம், ராஜபக் ஷவிடம் கோரும் ஆதரவு

வீரகத்தி தனபாலசிங்கம் 

முன்னாள் ஜனாதிபதி கூட்டு எதிரணியின் தலைவர்களூடாக தனது நிலைப்பாடுகளை சூட்சுமமான முறையில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அர­சி­ய­ல­மைப்பு வரைவுச் செயன் முறைகள் இறு­தியில் ஒப்­பே­றாமல் போய்­வி­டக்­கூ­டிய  அர­சியல் சூழ்­நிலை உரு­வா­கு­வ­தற்­கான அறி­கு­றிகள் இப்­போது தாரா­ள­மாகத் தென்­படத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.  தேசிய ஐக்­கிய  அர­சாங்­கத்தின் ஐக்­கிய தேசியக் கட்சி முகாம்  புதி­ய­தொரு அர­சி­ய­ல­மைப்பை  வரைந்து பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்றி நாட்டு  மக்­களின் அங்­கீ­கா­ரத்­தையும் பெறு­வ­தற்கு  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்­றுக்கு போவது தொடர்­பாக பேசிக்­கொண்­டி­ருக்­கின்ற அதே­வேளை,  ஸ்ரீலங்கா  சுதந்­தி­ரக்­கட்சி முகாம் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்­றுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய அவ­சி­யத்தை  தவிர்க்­கக்­கூ­டி­ய­தாக பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு  பெரும்­பான்மை ஆத­ர­வுடன் தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்­புக்கு முக்­கி­ய­மான திருத்­தங்­களைக் கொண்டு வரு­வது குறித்து அடிக்­கடி கருத்­துக்­களை வெளி­யிட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. 2015  இரு தேசியத் தேர்­தல்­க­ளிலும்  நாட்டு மக்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட பிர­தான வாக்­கு­று­தி­யான நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­முறை ஒழிப்பு தொடர்பில் அர­சாங்­கத்தின் இரு முகாம்­க­ளுக்­குள்ளும் ஒரு­மித்த கருத்து இப்­போது இல்லை என்­பது வெளிப்­ப­டை­யா­னது. இரு பிர­தான அர­சியல் கட்­சி­களும் சேர்ந்து அமைந்­தி­ருக்கும் தேசிய ஐக்­கிய அர­சாங்கம் நாட்டை அழுத்­து­கின்ற முக்­கி­ய­மான நெருக்­க­டி­க­ளுக்கு தீர்­வு­களைக் காண்­ப­தற்கு வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த  வாய்ப்பை வழங்­கி­யி­ருப்­ப­தாகச் செய்­யப்­பட்ட வர்­ண­னைகள்  எல்லாம் அர்த்­த­மற்­ற­வை­யாகப் போய்க் கொண்­டி­ருக்­கின்­றன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா  சுதந்­தி­ரக்­கட்­சியும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான  ஐக்­கிய தேசியக் கட்­சியும் தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளாக இருந்­து­கொண்டு முக்­கி­ய­மான பிரச்­சி­னை­களில் கருத்­தொ­ரு­மித்த அணு­கு­மு­றை­களைக் கடைப்­பி­டிப்­ப­தற்குப் பதி­லாக, பழைய கட்சி அர­சி­ய­லையே வேறு ஒரு பாணியில் முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. ஒன்று சேர்ந்து அர­சாங்­கத்தை அமைத்துக் கொண்டு பங்­காளிக் கட்­சிகள் ஏட்­டிக்குப் போட்­டி­யாகச் செயற்­ப­டு­வது எவ்­வாறு என்­ப­தற்கு இன்­றைய அர­சாங்கம் ஒரு வகை மாதி­ரி­யா­ன­தாக விளங்­கு­கி­றது என்றும் கூறலாம். ஆட்சி முறையின் எந்­த­வொரு செயற்­பா­டுமே முரண்­பா­டற்­ற­தாக இல்­லாத  துர­திர்ஷ்­ட­வ­ச­மா­ன­தொரு நிலை­மையே  இன்று ஏற்­பட்­டி­ருக்­கி­றது. தேசிய ஐக்­கிய அர­சாங்கம் எவ்­வ­ளவு காலத்­துக்குத் தாக்­குப்­பி­டிக்­குமோ என்ற கேள்வி மக்கள் மனதில் எழ ஆரம்­பித்து விட்­டது.

maithri and ranil

இத­னி­டையே, கடந்த வருடம் இரு தேர்­தல்­க­ளிலும் தோற்­க­டிக்­கப்­பட்ட முன்னாள்   ஜனா­தி­பதி     மகிந்த ராஜபக் ஷ  நாட்டு அர­சி­யலின் திசை­மார்க்­கத்­தையும் எதிர்­கால நிகழ்வுப்  போக்­கு­க­ளையும் தீர்­மா­னிக்கக் கூடிய அள­வுக்கு  வலு­வா­ன­தொரு சக்­தி­யாக மீண்டும் மாறு­வ­தற்­கான களத்தை இன்­றைய அர­சாங்­கத்தின் அணு­கு­மு­றை­களும் செயற்­பா­டு­களும் அமைத்துக் கொடுத்­துக்­கொண்­டி­ருப்­ப­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற  அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்தச் செயன்­மு­றை­க­ளுக்கு ராஜபக் ஷவின் ஆத­ரவை அர­சாங்கத் தலை­வர்கள் நாடி நிற்­கி­றார்கள். இம்­மாதம் முதலாம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் 2017 வர­வு–­செ­லவுத் திட்டம் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய ஜனா­தி­பதி சிறி­சேன, தவ­றான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுப்­பதன் மூல­மாக அர­சி­ய­ல­மைப்பு வரைவுச் செயன்­மு­றை­க­ளையும்  இன நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­க­ளையும் சீர்­கு­லைக்க  வேண்­டா­மென்று முன்னாள் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யி­ன­ரிடம் வேண்­டுகோள் விடுத்தார். தேசி­யப்­பி­ரச்­சி­னையைத் தீர்த்து வைப்­ப­தற்கு தற்­போது கிடைத்­தி­ருக்கக் கூடிய வாய்ப்பை அதி­கா­ரத்­துக்­காக குறு­கிய நோக்­குடன்  சண்­டைப்­பி­டிப்­பதன் மூல­மாக தவ­ற­வி­டு­வோ­மே­யானால், நாட்டில் மீண்டும் மோதலும் இரத்­தக்­க­ள­ரி­யுமே ஏற்­படும் என்று எச்­ச­ரிக்கை செய்த ஜனா­தி­பதி, நியா­ய­மா­னதும் ஒப்­பு­ர­வா­ன­து­மான தீர்­வொன்றைக் காண­ப­தற்கு உத­வக்­கூ­டிய  தமிழ்த் தலை­வ­ராக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் விளங்­கு­கிறார் என்றும் அவ­ரி­ட­மி­ருந்து கிடைக்­கின்­றதைப் போன்ற ஒத்­து­ழைப்பு வடக்கு, கிழக்கு அர­சியல் தலை­மைத்­து­வத்­தி­ட­மி­ருந்து எல்லாக் காலத்­திலும் கிடைக்­கு­மென்று  எதிர்­பார்க்க முடி­யாது என்றும் குறிப்­பிட்டார். வடக்கு, கிழக்கு  பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வொன்­றையும் உள்­ள­டக்­கி­ய­தாக புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை வரை­வ­தற்­கான முயற்­சி­களை ராஜபக் ஷவும் அவ­ரது அர­சியல் நேச­சக்­தி­களும் சீர்­கு­லைக்க முயற்­சிப்­ப­தாக குற்­றஞ்­சாட்­டிய ஜனா­தி­பதி குறு­கிய அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக மக்­களை தவ­றாக வழி நடத்­து­ப­வர்­களை போலித் தேச பக்­தர்கள் என்றும்  சாடினார்.

அர­சி­ய­ல­மைப்புச்  சீர்­தி­ருத்தச் செயன்­மு­றை­க­ளுக்கு கூட்டு எதி­ர­ணி­யி­ன­ரிடம் ஆத­ரவு கோரி ஜனா­தி­பதி சிறி­சேன சபையில் விடுத்த வேண்­டு­கோ­ளுக்கு  ராஜபக் ஷவின் பிர­தி­ப­லிப்பு எத்­த­கை­ய­தாக இருக்­கு­மென்று  அர­சியல்  வட்­டா­ரங்கள்  எதிர்­பார்த்துக் கொண்­டி­ருந்­த­போது, மூன்று நாள் கழித்து  (டிசம்பர் 4) அவர் நீண்­ட­தொரு அறிக்­கையை வெளி­யிட்டார்.

அர­சி­ய­ல­மைப்புச் சபை­யினால் நிய­மிக்­கப்­பட்ட 6 உப­கு­ழுக்­களும் அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்­தத்­துடன்  சம்­பந்­தப்­பட்ட பல்­வேறு விவ­கா­ரங்கள் குறித்து ஆராய்ந்து தயா­ரித்து கைய­ளித்த அறிக்­கைகள் தொடர்­பி­லான விமர்­ச­ன­மா­கவே ராஜபக் ஷவின் அந்த அறிக்கை அமைந்­தி­ருந்­தது. குறிப்­பாக, மத்­திய அர­சாங்­கத்­துக்கும் பிராந்­தி­யங்­க­ளுக்கும் இடை­யி­லான உற­வுகள் தொடர்­பாக ஆராய்ந்த (தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்ப்­பாண மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன்  தலை­மை­யி­லான) உப குழு அதி­காரப் பர­வ­லாக்கம் குறித்து முன்­வைத்­தி­ருந்த யோச­னை­களே முன்னாள் ஜனா­தி­ப­தியின் கடு­மை­யான கண்­ட­னத்­துக்­குள்­ளா­கி­யி­ருந்­தன. அந்த யோச­னை­களில் இருக்­கக்­கூ­டிய  தவ­றுகள் எவை, அவற்றில் எவற்றை மாற்­றி­ய­மைக்க வேண்டும் என்­பது பற்­றி­யெல்லாம் மக்­க­ளுக்கு விளக்­க­ம­ளிப்­பதைத் தவிர்த்து அப்­பட்­ட­மாக சிங்­கள தேசி­ய­வாத நிலைப்­பா­டு­களை  நியா­யப்­ப­டுத்­து­ப­வை­யா­கவே ராஜபக் ஷவின் வாதங்கள் அமைந்­தி­ருந்­தன. தனது ஆட்­சே­ப­னைக்­கு­ரி­யவை என்று பத்து முக்­கிய அம்­சங்­களை அவர் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருந்தார். அவற்றில் பத்­தா­வது அம்சம் இலங்­கையில் அர­ச­க­ரும மொழி­க­ளாக சிங்­க­ளமும் தமிழும் இப்­போது இருப்­ப­தையே அறி­யா­தவர் போன்று அவர் கருத்­துக்­களை வெளி­யிட்­டதை  அம்­ப­லப்­ப­டுத்­தி­யது. இலங்­கையின் முக்­கி­ய­மான  அர­சியல் விஞ்­ஞான பேரா­சி­ரி­யர்­களில் ஒரு­வ­ரான  கலா­நிதி  லக்­சிறி பெர்­ணான்டோ முன்னாள் ஜனா­தி­ப­தியின் இந்த அறிக்கை தொடர்­பாக ‘அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்தம் தொடர்பில் மகிந்த ராஜபக் ஷவின் வஞ்­சக அறிக்கை’ என்ற தலைப்பில் வெளி­யிட்ட  விமர்­ச­னத்தில் ‘அறிக்­கையை பெரும்­பாலும் ராஜபக் ஷவுக்­காக  பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் தான் எழு­தி­யி­ருப்­ப­தாகத் தோன்­று­கி­றது.  2005 ஆம் ஆண்­டிலும் 2010 ஆம் ஆண்­டி­லு­மாக  இரு­த­ட­வைகள்  நாட்டு மக்­க­ளினால் ஜனா­தி­ப­தி­யா­கத்­தெ­ரிவு   செய்­யப்­பட்ட ஒரு­வ­ரினால்  வெளி­யி­டப்­ப­டு­வ­தற்­கு­ரிய தகு­தி­யில்­லாத அறிக்கை’ இது’ என்று குறிப்­பிட்­டி­ருந்தார் என்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

Mahinda17-e1458745894327

மாகாண சபை­களை அமைப்­ப­தற்­காக 28 வரு­டங்­க­ளுக்கு முன்னர் கொண்­டு­வ­ரப்­பட்ட  அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13 ஆவது  திருத்­தத்தில் உள்ள அதி­காரப் பர­வ­லாக்க ஏற்­பா­டு­க­ளுக்கும்  அப்பால் சென்று (13+) இனப்­பி­ரச்­சி­னைக்குத்  தீர்வு காணத் தயா­ரா­யி­ருப்­ப­தாக ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் இருந்­த­போது சர்­வ­தேச சமூ­கத்­துக்கு கூறி­யவர்  ராஜபக் ஷ. இப்­போது வெளி­யிட்ட இந்த அறிக்கை 13 ஆவது திருத்­தத்­துக்கு  அப்பால் செல்­வ­தற்கு மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டிய  எந்­த­வொரு  முயற்­சி­யையும்  அவர் ஆத­ரிக்கப் போவ­தில்லை என்­பதை மாத்­தி­ர­மல்ல, அந்தத் திருத்­தத்தில் இப்­போது இருக்­கக்­கூ­டிய  அதி­கா­ரங்­க­ளையும் கூட குறைக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­ப­வை­யா­கவும் இருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

இவ்­வா­றாக, தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வாக  அமை­யக்­கூ­டிய  எந்­த­வொரு அதி­காரப் பர­வ­லாக்கல் ஏற்­பா­டு­க­ளையும் உள்­ள­டக்­கிய அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்த முயற்­சிகள் தொடர்பில் தனது நிலைப்­பாட்டை ராஜபக் ஷ வெளிக்­காட்­டி­ய­தற்கு பின்னர் தான் பிர­தமர்  விக்­கி­ர­ம­சிங்­கவும்  பாரா­ளு­மன்ற எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­தனும் அவரை சில தினங்­க­ளுக்கு முன்னர் சந்­தித்­துப்­பே­சினர். ஜனா­தி­பதி சிறி­சேன கேட்டுக் கொண்­ட­தற்­க­மை­வா­கவே இரு­வரும் முன்னாள் ஜனா­தி­ப­தியைச் சந்­தித்­தனர். பாரா­ளு­மன்­றத்தில் உள்ள பிர­த­மரின் அலு­வ­ல­கத்தில்  நடை­பெற்ற சந்­திப்பில் ராஜபக் ஷ என்ன கூறினார் என்­பது பற்றி தக­வல்கள்  இல்லை என்ற போதிலும், அவரின் ஆத­ரவைப் பெறு­வ­தற்­கான முயற்­சிகள் தொட­ர­வேண்டும் என்று சம்­பந்தன் கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார். தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்புச்  சீர்­தி­ருத்தச் செயன்­மு­றை­களில் பங்­கேற்­ப­தற்கு ராஜபக் ஷவுக்கு எந்த சிக்­கலும் இருக்­கக்­கூ­டாது என்­பதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தலை­வரின் கருத்­தாக இருக்­கி­றது.  சந்­திப்­புக்குப் பிறகு பிர­த­ம­ரி­ட­மி­ருந்து பெரி­தாக பிர­தி­ப­லிப்பு எதுவும் வர­வில்லை.

இது இவ்­வா­றி­ருக்க, ராஜபக் ஷ  விசு­வா­சி­களின்  கூட்டு எதி­ர­ணியின் முக்­கிய தலை­வர்­க­ளான முன்னாள் வெளி­யு­றவு அமைச்சர் பேரா­சி­ரியர் பீரிஸும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­த­னவும் நான்கு  தினங்­க­ளுக்கு முன்னர் அர­சி­ய­ல­மைப்பு  வரைவுச் செயன்­மு­றைகள் தொடர்பில் அர­சாங்­கத்­துக்கு நிபந்­த­னை­களை முன்­வைத்­தனர். பேச்­சு­வார்த்­தைக்கோ பேரம் பேச­லுக்கோ இட­மின்­றி­யவை என்று அவர்கள் வர்­ணித்த அந்த நிபந்­த­னை­களை  அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்டால் மாத்­தி­ரமே கூட்டு எதி­ர­ணி­யி­னரால் அர­சி­ய­ல­மைப்பு வரைவுச்  செயன்­மு­றை­களில் இனிமேல் பங்­கேற்­கக்­கூ­டி­ய­தாக இருக்கும் என்று பிர­க­டனம் செய்­தனர்.

அரசின் ஒற்­றை­யாட்சித் தன்மை, பெளத்த மதத்­துக்கு விசேட அந்­தஸ்து, வடக்கு மாகா­ணத்­துடன் கிழக்கு மாகாண  இணைப்பு இல்லை, பொலிஸ் அதி­கா­ரங்கள் பர­வ­லாக்­கப்­ப­டக்­கூ­டாது, நாட்டின் எந்தப் பகு­தி­யிலும் காணி­களை பயன்­ப­டுத்­து­வ­தற்கு மத்­திய அர­சாங்­கத்­துக்கு அதி­கா­ர­ம­ளிக்கும் ஏற்­பாடு, அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தத்தில் உள்ள பொதுப்­பட்­டியல் தொடர்ந்தும் இருக்க வேண்டும், பொது­மக்கள் பாது­காப்பு  தொடர்­பி­லான விவ­கா­ரங்­களில் எந்­த­வொரு  மாகா­ணத்­திலும் மத்­திய அர­சாங்கம்  தலை­யி­டு­வ­தற்­கான உரிமை என்­பவை  கூட்டு எதி­ர­ணியின் அந்த நிபந்­த­னை­களில்  முக்­கி­ய­மா­னவை.

அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்­தங்கள் தொடர்பில்  யோச­னை­களை முன்­வைக்­கு­மாறு மற்­றைய கட்­சி­களை கேட்­ப­தற்கு முன்­ன­தாக அர­சாங்கம் அதன் யோச­னை­களை வெளிப்­ப­டுத்த வேண்டும் என்றும் பேரா­சி­ரியர் பீரிஸ் செய்­தி­யாளர் மாநாட்டில்  வலி­யு­றுத்­தினார்.

முன்னாள் ஜனா­தி­ப­தியின் ஆத­ரவைப்  பெறு­வ­தற்கு  அர­சாங்கம் அக்­கறை காட்­டு­கின்ற  வேளையில், அவர் தனது நிலைப்­பா­டு­களை முன்னைய தனது அறிக்கை மூலமாகவும் கூட்டு  எதிரணியினரின் நிபந்தனைகள் மூலமாகவும் சூட்சுமமான முறையில் விளம்பரப்படுத்தியிருந்தார். இந்த  நிலைப்பாடுகள்  தேசிய  பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு  முயற்சியையும் ராஜபக் ஷ ஒருபோதும் ஆதரிக்க முன்வரப் போவதில்லை என்பதை தெளிவாக உணர்த்துகின்றன. புதிய அரசியலமைப்பு  வரைவுச் செயன்முறைகள் ஆரம்பிக்கப்பட்ட தொடக்க தருணத்தில் அமைதியாக இருந்த ராஜபக் ஷ  இப்போது அரசாங்கத்தின் அந்த  முயற்சிகள் வெற்றியளிக்காதிருப்பதை  உறுதி செய்யக்கூடிய  தந்திரோபாயங்களைக் கடைப்பிடிக்க   ஆரம்பித்திருக்கிறார். அவரின் ஆதரவைப்  பெறுவதற்காக அரசாங்கம் அதன் நிலைப்பாடுகளைத் தளர்த்துவதாக இருந்தால் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களினால் எந்த வித பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை.

epa04907823 Sri Lanka?s 8th Parliament in its maiden session at Sri Jayewardenepura Kotte in Colombo, Sri Lanka, 01 September 2015. The maiden session of Parliament began following the General Elections held on 17 August where the United National Party won a majority number of seats, though not an absolute majority. The party is to form a National Government with the main opposition Sri Lanka Freedom Party of which President Maithripala Sirisena is the chairman.  EPA/M.A.PUSHPA KUMARA

epa04907823 Sri Lanka?s 8th Parliament in its maiden session at Sri Jayewardenepura Kotte in Colombo, Sri Lanka, 01 September 2015. The maiden session of Parliament began following the General Elections held on 17 August where the United National Party won a majority number of seats, though not an absolute majority. The party is to form a National Government with the main opposition Sri Lanka Freedom Party of which President Maithripala Sirisena is the chairman. EPA/M.A.PUSHPA KUMARA

அரசாங்கத்தினால் முன்வைக்கப்படக் கூடிய அரசியலமைப்பு வரைவில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் உள்ளடக்கப்படக்கூடிய அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகள் எத்தகையனவாக இருக்கும் என்பதை தெரிந்துகொண்ட பின்னர் அவற்றை அடிப்படையாக வைத்து சிங்கள மக்கள் மத்தியில் தீவிரமான பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு ராஜபக் ஷ காத்துக்கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

அவரிடம் ஆதரவை எதிர்பார்த்து அரசாங்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்த உத்தேசிப்பது அவரின் நிலைப்பாடுகளுக்கு நியாயப்பாட்டைத் தேடிக் கொடுப்பதாக மாத்திரமே அமையும்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *