Search
Wednesday 26 July 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இராணுவத்தினர் அச்சுறுத்தும் சம்பவங்கள் வடக்கில் தொடர்கின்றன…

இராணுவத்தினர் அச்சுறுத்தும் சம்பவங்கள் வடக்கில் தொடர்கின்றன…

ரைசா விக்கிரமதுங்க- தமிழில் சமகளம்
இராணுவத்தின் பிடியிலிருந்து பொதுமக்களிடம் விடுவிக்கப்பட்ட பிலாக்குடியிருப்பு பரவிப்பாஞ்சான் – மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் இராணுவத்தினரின் அச்சுறுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

மார்ச் 9 ம் திகதி அந்த பகுதிக்கு தான் விஜயம் மேற்கொண்டவேளை இராணுவத்தினரால் தான் கேள்விக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் பொதுமக்களிடம் உரையாடிக்கொண்டிருந்தேன் அவ்வேளை சாதாரண உடையில என்னை நோக்கி இருவர் வந்தனர்- அவர்கள் என்னிடம் நான் யார்- எதற்காக வந்திருக்கிறேன் என கேட்டனர்-நான் அவர்களிடம் நீங்கள் யார் என கேட்டவேளை அவர்கள் தாங்கள் அருகில் உள்ள விமானப்படை முகாமை சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர் என பெர்ணாண்டோ குறிப்பிட்டார். நான் அவர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் அங்கிருந்து வந்துவிட்டேன் எனவும் அவர் தெரிவித்தார். அதன் பின்னர் விமானப்படையை சேர்ந்தவர்கள் தன்னை துன்புறுத்த முயலவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பிலாக்குடியிருப்பு மக்கள் படையினர் கைப்பற்றிவைத்துள்ள நிலங்கை தங்களிடம் மீள ஓப்படைக்க வேண்டும் என கோரி ஜனவரி 31 ம் திகதி முதல் மார்ச் 1 முதலாம் திகதி வரை போரட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அவர்களின் அனேகநிலங்களை முதலாம் திகதி படையினர் விடுவித்துள்ளனர். எனினும் புதுக்குடியிருப்பு மக்கள் தங்கள் வாழ்வை மீள கட்டியெழுப்புவதில் கடும் சவாலை எதிர்கொள்கின்றனர்.

அவர்கள் மரங்களின் கீழ் வாழ்கின்றனர்-அவர்களிற்கு மின்சாரமும் நீரும் வீடுகளும் தேவை அவர்களில் அனேகமானவர்கள் கூலித்தொழிலாளிகள் அவர்களின் குழந்தைகள் பாடசாலைக்கு செல்கின்றனர் ஆனால் பேருந்து சேவைகள் எதுவும் இல்லை என மேலும் தெரிவித்தார் ருக்கிபெர்ணாண்டோ.

ru

முல்லைத்தீவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தினர் அவர்களிற்கு அத்தியாவசியப்பொருட்களை வழங்கியுள்ளனர் ஆனால் அரசாங்கத்திடமிருந்து அவர்களிற்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் அவர்களிற்கு உதவ முன்வரவேண்டும் காணிகளை விடுவிப்பது மாத்திரம் போதுமானதல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

அச்சுறுத்தும் சம்பவங்களிற்கு அப்பால் வேறு பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன நிலங்களை விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட அழுத்தத்தினால் படையினர் அவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்கிறார் ருக்கிபெர்ணாண்டோ.

இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் தங்கள் நிலங்களை ஓப்படைக்குமாறு கோரி மக்கள் முன்னெடுத்த போராட்டங்கள் காரணமாக கேப்பாபிலவு ஊடகங்களில் கவனம் பெற்றது.

கேப்பாபிலவு மற்றும் பிலாக்குடியிருப்பு ஆகியவற்றிற்காக இடம்பெற்ற போராட்டங்களில் முன்னணியில் திகழ்ந்தவர் சந்திரலீலா – அவரது வீடு இன்னமும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளது. சமீபத்தில் படையினர் அவர் தன்னுடைய விவசாய நிலங்களிற்கு செல்வதை தடுத்து நிறுத்தினர் என தெரிவித்தார் பெர்ணாண்டோ விமானப்படையினர் தற்போது விவசாய தேவைகளிற்காக பயன்படுத்தப்பட்ட அந்த நிலம் வனஇலாகாவின் காணி என்கின்றனர் ஆனால் அந்த பெண்ணிடம் சட்ட ரீதியான ஆவணங்கள் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டங்கள் வெற்றியடைந்த சீற்றத்திலேயே படையினர் இவ்வாறு நடந்துகொள்கி;;ன்றனர் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அரசாங்கம் 40 ஏக்கர் நிலத்தை மீளவழங்கியுள்ளது ஏனைய குடும்பங்கள் தங்கள் காணிகளை கோரி மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ள எனவும் அவர் தெரிவித்தார்.

படையினர் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொள்பவர்களை படமெடுத்தும் வருகின்றனர் நாங்கள் எங்கள் வாகனத்திலிருந்து இறங்கியவுடன் அவர்கள் எங்களை முகாமிற்குள் இருந்து படமெடுத்தனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களும் இதனை பார்த்தனர் எனவும் பெர்ணாண்டோ குறிப்பிட்டார். படையினர் தாங்கள் கைப்பற்றி வைத்துள்ள நிலங்களை விடுவிக்கவேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டங்களிலும் படையினரின் அச்சுறுத்தல் காணப்பட்டது.

புதுக்குடியிருப்பில் தங்கள் ஆர்ப்பாட்டம் வெற்றியளித்த பின்னர் தங்கள் நிலங்களிற்கு திரும்பி மக்கள் தங்களது வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.வீடுகளின் கதவுகள்இஜன்னல்கள் போன்றவை அகற்றப்பட்டுள்ளன.அவர்களின் வீடுகளை சுற்றி மதுப்போத்தல்களை காணமுடிகின்றது.அங்கிருந்த சிறிய கடையொன்றும் அளிக்கப்பட்டுள்ளது.மக்களிற்கு மீண்டும் அவர்களது நிலம் கிடைத்துள்ளது குறித்து படையினர் நிச்சயமாக சீற்றமடைந்துள்ளனர்இஎன தெரிவித்த ருக்கி பெர்ணாண்டோ நிலங்கள் விடுவிக்கப்படுவதன் நோக்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எனினும் அதற்கு எதிர்மாறான விடயமே அங்கு இடம்பெற்றுள்ளது என்கிறார்.

ru1
கேப்பாபிலவில் இராணுவத்திற்கு சொந்தமானது என அடையாளமிடப்பட்ட பகுதிகளை காணமுடிகின்றதுஇஇந்த அறிவிப்பு பலகை புதியது சில வாரங்களிற்கு முன்னர் நான் விஜயம் மேற்கொண்டவேளை அதனை காணவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நிலங்களை ஓப்படைக்குமாறு மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டங்களிற்கு சமாந்தரமாக காணமற்போனவர்களின் உறவுகளும் பேராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இந்த போராட்டங்களில் முக்கியமான விடயம் என்னவென்றால் அவர்கள் சிங்கள மக்களின் ஆதரவை பெற முயல்கின்றனர்இசிங்களத்தில் பதாகைகளை காணமுடிகின்றது என ருக்கி பெர்ணாண்டோ தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *