Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை பிரஜாவுரிமை பெற்றவரா? எங்கு வாழ்ந்தாலும் வாக்காளர்களாக பதிந்து எமது அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரியுங்கள்

இலங்கை பிரஜாவுரிமை பெற்றவரா? எங்கு வாழ்ந்தாலும் வாக்காளர்களாக பதிந்து எமது அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரியுங்கள்

பேராசிரியர் இரா.சிவசந்திரன் (பணிப்பாளர், சிந்தனைகூடம் – யாழ்ப்பாணம்)

சிந்தனைக்கூடம், யாழ்ப்பாணம் எனும் ஆய்வுஅபிவிருத்திக்கானநிறுவனத்தின் செயற்குழு,நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரனின் தலைமையில் கடந்த 18.05.2016 அன்று கூடி வாக்காளர் பதிவுபற்றியவிடயங்களைஅக்கறையுடன் ஆராய்ந்தது.

இதில் புலத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வசிக்கும் தமிழ் மக்களிடம் அவசர வேண்டுகோளொன்றினை விடுத்து அதனை செயற்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் ஆராய்ந்து சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

1.இலங்கையில் ஒவ்வொருவருடமும் யூன் மாதம் வாக்காளர் பதிவுகளும், புதிய வாக்காளர்களை உள்வாங்குதலும் நடைபெறும் நடவடிக்கையாகும். இவ்வாண்டு (2016) யூன் மாதம் 1ம் திகதி முதல் இரண்டு மாதங்கள் இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளன. இதன்படி 31.05.1998 அன்று அல்லது அதற்கு முன் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்டோர் புதியவாக்காளர்களாக பதியும் நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளன. இப் புதிய வாக்காளர் பதிவின் போது தவறுதலாகவிடப்பட்ட ஆனால் வாக்காளர்களாக பதியும் உரிமைபெற்றவர்களும் வாக்காளர் இடாப்பில் பதிவை மேற்கொள்ளமுடியும்.

மேற்படி விடயங்களை மனங்கொண்டு புலத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் சில ஆக்க பூர்வமான தீர்மானங்களை மேற்கொண்டு துரிதமாக செயற்படுத்துவதன் மூலம் எமது வாக்காளர் எண்ணிக்கையையும், பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இலங்கையர் தனது பிரஜாவுரிமையுடன் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் வாக்காளர்களாக பதிந்து தங்களது உரிமையை நிலைநாட்டும் அடிப்படை மனித உரிமையை கொண்டவர்கள். இதனடிப்படையில் புலம் பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கை பிரஜாவுரிமையோ அல்லது இரட்டை பிரஜாவுரிமையோ பெற்றிருப்பின் அவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்ய முடியும். புலத்தில் வாழும் அவர்களது உறவினர்கள் வெளிநாட்டவர்களின் கடவுச்சீட்டின் புகைப்பட பிரதியை பெற்று தங்களுடன் இணைத்து அவர்களையும் வாக்காளர்களாக பதிவு செய்ய முடியும்.

நாம் சிறுபான்மையாகி விட்டோம் என அங்கலாய்க்காது தமிழர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவது ஆக்க பூர்வமான செயலாக விளங்கும். எனவே அதற்கான முயற்சியை இன்றே புலம் பெயர்ந்து வாழ்வோர் மேற்கொள்ள வேண்டுமென சிந்தனைக்கூடம் அறிவுறுத்துகிறது.

1.இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் அகதிகளாக வாழ்கின்ற 1½ இலட்சம் இலங்கை தமிழர்கள் தங்கள் வாக்குரிமையை நிலை நிறுத்துவதற்கு உடனடியாக பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். இதனை தங்களது அகதிகளின் புனர் வாழ்வு நிறுவனங்கள் ஊடாக சாத்தியமாக்கலாம். இவர்கள் எங்கிருந்து இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தார்களோ அங்கங்கே தங்களது வாக்குகளை பதியலாம். இதற்காக அனைத்து அரசியல்வாதிகளும் உதவ வேண்டுமென சிந்தனைக்கூடம் கூறுகிறது.

மேற்படி இரண்டு விடயங்களையும் மனங்கொண்டு உடனடியாக வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ள தமிழ் சமூகத்தின்பால் அக்கறையுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள், மக்கள் நலன் சார் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் போன்றன இன்னும் ஓரிரு வாரங்களில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சிந்தனைக்கூடம் கோருகின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *