Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உயிரியல் யுத்தம் -களமுனை 02

உயிரியல் யுத்தம் -களமுனை 02

-செந்துருவன்-

சென்ற தொடரில் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கின்ற உளவியல் போர் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தது. இத்தொடரில் அதை விட பயங்கரமான, இனவழிப்பின் தூரநோக்கு இலக்கை கொண்ட, தமிழர்கள் மீது செயற்படுத்தபட்டுக்கொண்டிருகின்ற உயிரியல் யுத்தம் தொடர்பாக ஆராய்வோம். அதாவது உயிரியல் யுத்தம் அல்லது உயிரி யுத்தம் என்பதான காலகாலமாக மனிதன் பாவித்து வருகின்ற ஒரு நாசகார ஆயுதம். இந்த யுத்தம் பாரிய உடனடி மற்றும் பின்னான உயிரி அழிவுகளை ஏற்படுத்தக்கூடியது. அதவாது நஞ்சூட்டுவது, நோய்களை பரப்புவது, பாம்பு போன்ற கொடிய விலங்குகளைமக்கள் பிரதேசங்களுக்குள் விடுவது. அழுகிய பிணங்களை புதைப்பது போன்ற செயற்பாடுகள் மூலம் ஒரு உயிரியல் சூனிய பிரதேசத்தை உருவாக்குவதே முக்கியமான இதன் நோக்கமாகும்.

இந்த நிலையிலேயே தமிழ் மக்கள் மீது சிங்கள அரச பயங்கரவாதம் பாரிய ஒரு உயிரியல் யுத்தம் ஒன்றை கட்டவிழ்த்து விட்டு. உயிரியல் யுத்தம் சிங்கள தேசத்து நிகழ்ச்சிநிரலில் முக்கியத்துவம்மிக்கதாக உள்ளது. இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் நிலைமைகளில் குழப்பங்களை ஏற்படுத்தி. தமிழ்மக்களின் எதிர்கால இருப்பினை கேளிவிக்குறியாக்குவதே இந்த யுத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதில் முதலாவதாக முள்ளிவாய்க்கால் யுத்தகளமுனையை கடந்து வந்த மக்கள் தற்பொழுத பெரிதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாதிக்கப்படுவது சிறுவர்கள் ஆகவே இருக்கின்றார்கள். அதுமட்டுமின்றி, மேலும் பல வகையான நோய்தாக்கங்களுக்கும் ஆளாகி வருகின்றார்கள். அதுமட்டுமின்றி முள்ளிவாய்க்கால் போருக்குள் சிக்குண்டு வந்த பெண்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் பெரிதும் குறைபாடுடையவர்களாகவே பிறக்கிறார்கள். இது சம்பந்தமாக எவரும் போதிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

1980ம் ஆண்டு ‘ஒப்பரேசன் எக்கோலொயி (Ecology) எனும் ஒரு நடவடிக்கையை சோவியத் நிகழ்த்தி இருந்தது. அதாவது நாசகார உயிரியல் ஆயுதங்ளை எதிரிநாடுகளின் கால் நடைகள் மேல் விமானம் மூலம் விசிறி இருந்தன. இதே போன்றதொரு செயற்பாட்டை சிங்கள தேசம் முள்ளிவாய்க்கால் முற்றுகைக்குள் வைத்து தமிழ் மக்கள் மீது ஏன் செய்திருக்க கூடாது என்கின்ற ஒரு பலத்த சந்தேகம் எழுகின்றது.

இரண்டாவதாக போர் நடந்த பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கும் இதே போன்ற தொரு நோய் தொற்று பெரிதும் இருகின்றது. அதாவது குறிப்பாக முள்ளிவாய்க்கால் பகுதியில் இனந்தெரியாத நோய் ஒன்று பரவிவருவதாக சில மாதங்களுக்கு முதல் செய்திகள் வந்திருந்தமை யாவரும் அறிந்ததே. முள்ளிவாய்க்கால் பகுதியில் இனவழிப்பு தடயங்களை அழிப்பதற்காக சிங்கள தேசம் சீனவில் இருந்து கொண்டுவரப்பட்ட அமிலங்கள் விசிறப்பட்டதாக சிலவருடங்களுக்கு முன் செய்திகள் வந்திருந்தன. அதாவது போரால் அதிகம் பாதிக்கப்பட்டு அதிகமக்கள் உயிரிழந்த பகுதி முள்ளிவாய்க்கால். குறிப்பாக யுத்தத்தின் இறுதி நாட்களில் மக்களின் சடலங்கள் புதைக்ககூடிய முடியாத நிலையில் அனாதரவாக விடப்பட்டிருந்தன. இப்படியான ஒரு சூழ்நிலையில் அங்கு மக்கள் மீள்குடியமர்த்ப்பட்ட போது, முள்ளிவாய்கால் முற்றுமுழுதாக தொற்றுநீக்கப்பட்டதா என்கிற கேள்வியும் எழுகின்றது. அதுமட்டுமின்றி சிங்கள தேசம் சீனாவில் இருந்து கொண்டுவந்து விசிறியது உண்மையிலேயே இனவழிப்பு தடயங்களை அழிக்கமட்டும்தான இல்லை விசிறப்பட்டது நாசகார நோய்காரணிகளுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.

blade_pixiv_gia_virus_biologic_2560x1600_wallpaperfo.com

முன்றாவது யாழ்ப்பாணத்தில் இருக்கும் நீர்ப்பிரச்சனை அதாவது சுன்னாகம் கிணறுகளில் உருவான கழிவு எண்ணெய் மற்றும் நீரில் நைத்திரேற்று மற்றும் மலக்கழிவுகள் கலந்திருப்பாக செய்திகளும் அறிக்கைகளும் வெளியாகின. அதாவது இந்த செயற்பாடுகளானது யாழ்மண்ணை ஒரு உயிரியல் சூனியப்பிரதேசமாக மாற்றுவதாகவே இருக்க வேண்டும். காரணம் வளமான மண் மற்றும் விவசாயத்துக்கு ஏதுவாக காரணிகள் காணப்படுகின்ற யாழ்மண்ணில் இப்படியான செயற்பாடுகளை செய்வதன் மூலம், எந்த மண்ணுக்குகாக ஆயிரம் ஆயிரம் மக்களும் மாவீரர்களும் தங்கள் உயிர்களை கொடுத்தார்களோ, அந்த மண்ணை விட்டே அவர்களை பெயர்த்தெடுக்கும் முயற்சியாகத்தான் இருக்கவேண்டும்.

நான்காவதானது விவசாயம் மற்றும் மீன்பிடிகளை இலக்கு வைக்கிறது. அதாவது பயிர்களுக்கு நாசத்தை ஏற்படுத்தும் நோய்கள், மண்ணை பாதிக்கும் உரங்கள் என்பன திட்டமிட்டே தமிழ் பிரதேசங்களில் விற்கப்படுகிறது, பரப்பப்படுகிறது. அதே போன்றே மீன்பிடிக் கைத்தொழிலிலும் இவ்வாறான செயற்பாடுகள் நிவைவேற்றப்படுகின்றன. அது மட்டுமன்றி  சீன அரிசிகள், கருத்தடையை  ஏற்படுத்தும் இயல்பை கொண்ட உணவுகள் என்பன தமிழ் பிரதேசங்களை நோக்கி கொண்டுவரப்படுகின்றன. ஆனால் இது சம்பந்தமான தெளிவை மக்களுக்கு வழங்க தமிழ் அரசியல்வாதிகளும் பொது அமைப்புக்களும் ஏனோ முன்வரவில்லை.

இவற்றில் இருந்து தமிழ் மக்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட போகிறார்கள். அதாவது கண்ணுக்குத்தெரியாத இந்த நாசகார ஆயுதங்களிடம் இருந்த தமிழ்மக்களை பாதுகாக்கவேண்டியவர்கள் யார்? வெறும்வியாபாரத்தை மட்டும் நோக்காக கொண்ட மருத்துவர்கள் மக்களுக்கு இலவசமாக நோய் கண்டறியும் முகாம்களை நடத்துவார்களா அல்லது பொது அமைப்புக்கள் மக்களுக்கு இது சம்பந்தமான தெளிவை ஏற்படுத்துமா? ஊடகங்களவாது செத்தவீட்டு செய்திகளை விடுத்து குறைந்தது சினிமா செய்திக்குப் பதிலாகவாவது இது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு செல்லுமா? என்றால் அனைத்துமே கேள்விக்குறிதான். இவை அனைத்தும் ஒரு சேர இணைந்தால் மட்டுமே தமிழ்மக்களின் எதிர்கால இருப்பு உறுதிப்படுத்தப்படும். அல்லது வடக்கு கிழக்குமாகணங்கள் ஒரு பலஸ்தீனாகவோ அல்லது புகுசிமா நாகசாகியாகவே மாற்றம் பெறுமா? விடைகள் உங்களிடமே……

களமுனை தொடரும்…………

முன்னைய பகுதிகள்:

திறந்துவிடப்பட்ட உளவியல் போர் – களமுனை -1


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *