செய்திகள்

உயிருடன் எவரவாது மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கைகள் குறைவடையத் தொடங்கியுள்ளன

நியுயோர்க்டைம்ஸ்-

வானிலை அவதான நிலையத்தின் எதிர்வுகூறல்களையும் மீறி சில நாட்களிற்கு முன்னாள் மண்சரிவில் மூன்று கிராமங்கள் புதையுண்டு போன அந்த பகுதியில் இன்னமும் மழைபெய்துகொண்டிருந்தது. இந்த மண்சரிவு அபாயம் உள்ளது என்பதை அறிந்திராத அந்த கிராமத்தின் மக்கள் பரிதாபமாகரமாக மாண்டுபோயினர்.

இதனை தொடர்ந்து இராணுவத்தின் விசேட படைப்பிரிவொன்று உடனடியாக மீட்பு பணிகளை ஆரம்பித்தது.எவராவது உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை இல்லாத போதிலும் அவர்கள் தங்கள் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

சில நாட்களிற்கு முன்னர் வரை தனது வீடு காணப்பட்ட தற்போது சேற்றுநிலமாக காணப்படுகின்ற அந்த பகுதியை தனது நாயுடன்சேர்ந்து பார்த்துக்கொண்டிருந்த பிரேமா அதிகாரி தீடிரென மெல்லிய குரலில் கதறத்தொடங்கினார். எங்கள் பக்கத்துவீட்டுக்காரர்கள் எங்களை அங்கிருந்து செல்லும்படி சத்தமிட்டனர். ஆனால் அவர்களிற்கு அது கேட்கவில்லை என தெரிவித்த அவர் மண்சரிவில் சிக்குண்டு இறந்துபோன தனது 15 வயது மருமகள் குறித்தும் வேதனை வெளியிட்டார். அவள் அழகானவள் என அவர் தெரிவித்தார்.

அவருடன் நாங்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போதே மழையின் வேகம் அதிகரிக்க தொடங்கியது.  இராணுவத்தினர் வேகமாக கரடுமுரடான அந்த பகுதியிலிருந்து இறங்க தொடங்கினர். புதிதாக சிறிய மண்சரிவுகள் ஏற்பட்டதை காணமுடிந்தது.

அவர்கள் பலியானவர்களின் உடல்களையாவது கண்டுபிடிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் அப்படி அவர்கள் உடல்களை கண்டுபிடித்தால் நாங்கள் அவர்களிற்கு இறுதிமரியாதையாவது செலுத்தலாம் என பிரேமா அதிகாரி தனக்கு அருகிலுள்ள பொலிஸ் அதிகாரியிடம் தெரிவிப்பதை கேட்க முடிந்தது.

நாட்டில் பெய்துவரும் மழைவெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 58 பேர் வரை இறந்துள்ளதாக வியாழக்கிழமை அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர்,ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற பொதுவான அச்சம் காணப்படுகின்றது. 300,000 ற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அரநாயக்காவை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் 130 பேர் வரை காணமற்போயுள்ளனர் அவர்கள் பலியாகியிருக்கலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது என மீட்புப்பணிகளுக்கு பொறுப்பாக உள்ள மேஜர் ஜெனரல் சுடந்த ரணசிங்க தெரிவித்தார்.

landslide-aranayake-180516-seithy (3)அரநாயக்காவை உள்ளடக்கியுள்ள கேகாலை இரு மண்சரிவுகளை எதிர்கொண்டதாக இலங்கையின் அனர்த்தமுகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப்கொடிப்பிலி தெரிவித்தார். கேகாலை தலைநகர்கொழும்பிலிருந்து 75 மைல் தொலைவில் உள்ளது.

அனர்த்த நிவாரணப்பணிகளிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலி நிலையத்திற்குள் காணப்பட்ட மேஜர் ஜெனரல் சுடந்த ரணசிங்க தனது இராணுவத்தினர் மேற்கொள்ளும் மீட்புப்பணிகள் குறித்து விபரித்தார்.

அரநாயக்காவில் மண்சரிவில் சிக்குண்டு கிராமத்தவர்கள் எவராவது உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவரிடமும் காணப்படவில்லை.அந்த பகுதியில் 66 வீடுகள் காணப்பட்டன.

அந்த பகுதியில் எவரையாவது உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை என அவர் குறிப்பிட்டார்.

அதிகாலைக்கு சற்று முன்னதாக நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் அந்த பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர்.முழங்கால் வரை காணப்பட்ட சேற்றிற்கு மத்தியில் அவர்கள் அந்த மலைப்பகுதியில் ஏறினர். எவராவது உயிருடன் இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிப்பதற்காக அவர்கள் சேற்று நீரை மரக்கிளைகள், குச்சிகளால் துழாவினர்.

அவ்வேளை செருப்புகள்,போன்ற சிறியபொருட்கள் மிதக்கத்தொடங்கின. குடும்பத்தவர்களை இழந்தவர்களிற்கு சிறிய அமைதியையாவது வழங்குவதற்காகவே நாங்கள் மீட்புப்பணிகளை முன்னெடுக்கின்றோம் என மேஜர் ஜெனரல் சுடந்த ரணசிங்க தெரிவித்தார் எனினும் தொடர் மழை மீட்புபணிகளை பாதித்துள்ளது கடினமானதாக்கியுள்ளது.

காதையடைக்கும் சத்தத்துடன் செவ்வாய்கிழமை இரவு ஏற்பட்ட மண்சரிவு குறித்து விபரித்த சிறிய கடை உரிமையாளரான நிமால் ரட்ணசிங்க ஹெலிக்கொப்டர் ஓன்று தரையிறங்குவது போன்று அந்த சத்தம் காணப்பட்டதாக குறிப்பிட்டார்.

ஆதன் பின்னரே கற்கள் மலையிலிருந்து வீழ்வதை நான் உணர்ந்தேன்,எனவும் தெரிவித்தார் அவரது கடை சேறு மற்றும் மண்ணினால் நிரம்பி காணப்படுகின்றது. எனினும் அவர் இந்த அனர்த்தத்திலிருந்து உயிர்பிழைத்துள்ளார்.

அரநாயக்க மலையின் மீது வீடொன்று காணப்படுகின்றது,அதன் கூரைகள் முற்றாக சேதமடைந்துள்ளன,அந்த வீட்டின் கூரையூடாக சேதமடைந்த சலவை இயந்திரம் மற்றும் மண்ணில் புதையுண்டு போன மீன்தொட்டி ஆகியவற்றை பார்க்க முடிகின்றது. அங்கு தப்பியுள்ளது ஓரு பௌத்த சிலை மாத்திரமே, அதனை ஆச்சரியம் என்கின்றனர் மக்கள்.

அது தன்னுடைய சகோதரியின் வீடு என தெரிவிக்கும் 53 வயது சேகரா மலையில் சத்தத்தை கேட்டு தப்பியோடியதால் தனது சகோதரி உயிர் தப்பினார் என தெரிவித்தார். அவர் தானும் அப்பகுதியில் உள்ள மக்களும் எவராவது உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை தான் இழந்துவிட்டதாக குறிப்பிட்டார்,உயிருடன் இருப்பார்கள் என தேடுவதில் எந்த அர்த்தமும் இல்லை,சேற்றிற்கு அடியில் 40 அடியில் நீங்கள் யாரையாவது தேடிக்கண்டுபிடிக்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.

நாங்கள் என்ன நடக்கின்றது என்பதை உணர்ந்ததும் அங்கிருந்து ஓடத்தொடங்கினோம்,பெரும் கற்பாறைகள் பலத்த சத்தத்துடன் மலையிலிருந்து உருள தொடங்கின. அவை வீடுகளை இடித்து தரைமட்டமாக்கின,நாங்கள் முன்கதவை திறந்து நெல் வயல் நோக்கி பாதுகாப்பாக ஓடினோம் என தெரிவித்தார் 63வயது டிங்கிரி மாத்தையா.

நான் எப்போது எனது வீட்டிற்கு திரும்புவேன் என்பது தெரியாது,அவர்கள் எனது வீடு மண் மற்றும் சேற்றினால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர்,என அவர் குறிப்பிட்டார்.

உயிர் தப்பியவர்களில் சிலர் தங்களிற்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்,எனினும் அதனை மறுத்த மேஜர் ஜெனரல் சுடந்த ரணசிங்க இந்;த மலைப்பகுதியில் எல்லாமே சிறப்பாக விளையும் அதனால் மக்களிற்கு இங்கிருந்து செல்ல விருப்பமில்லை என்றார்