Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எங்கள் குடும்பத்தில் ஐந்து பேரை பதுங்குழிக்குள் இழந்தோம்

எங்கள் குடும்பத்தில் ஐந்து பேரை பதுங்குழிக்குள் இழந்தோம்

நியுயோர்க் டைம்ஸ்

கிளிநொச்சியில் அந்த வீட்டின் முன்னால் காணப்படும் சிறிய மேசையில் 12 வயது சிறுமியின் புகைப்படம் காணப்படுகின்றது. அந்த சிறுமி பிங்க் நிற ஆடையில் காணப்படுகின்றார். அவரது படத்திற்கு அருகில் அவரது உறவினர்களின் படங்களும் காணப்படுகின்றன.

அந்த படங்களில் உள்ளவர்கள் அனைவரும் இராமசாமியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், கிளிநொச்சியிலிருந்து 35 கிலோமீற்றர் தொலைவில் இலங்கையின் நீண்ட கால உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்தவேளை கொல்லப்பட்டவர்கள். பாதுகாப்பு வலயமாக விளங்கவேண்டிய பகுதியில் பதுங்குழிக்குள் தஞ்சமடைந்திருந்த வேளை அவர்கள் கொல்லப்பட்டனர்.

நாங்கள் கிளிநொச்சியை சேர்ந்த பலருடன் உரையாடிய வேளை இந்த இழப்புகள் இராமசாமி குடும்பத்தினரிற்கு மாத்திரம் உரியவையல்ல என்பது புலனாகியது. இலங்கையின் இரு இனக்குழுக்களிற்கு இடையிலான யுத்தம்-(சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசாங்கம் எதிர் விடுதலைப்புலிகள) 26 வருடங்களில் பல்லாயிரக்கணக்கானவர்களை பலிகொண்டது.

கிளிநொச்சியை பொறுத்த வரையிலும் அனைவரிடமும் தங்கள் குடும்பத்தவர்கள் எவராவது கொல்லப்பட்டது குறித்த அல்லது காயமடைந்தது பற்றிய கதைகள் காணப்படுகின்றன. இவ்வாறு பலியானவர்களில் அனேகமானவர்கள் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளிற்கு எதிராக மேற்கொண்ட தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கையில் சிக்குண்டவர்கள்.

நாங்கள ஓரே புதைகுழியில் எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஐவரை புதைத்துவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பியோடினோம் என தெரிவிக்கின்றார்,. மேலே குறிப்பிடப்பட்ட படத்தில் பிங்க் நிற ஆடையில் காணப்பட்ட 12 வயது மோகனரூபியின் தாய் சரஸ்வதி இராமசாமி. தான் இழந்த தனது பாசத்திற்குரியவர்களின் புகைப்படத்திற்கு அருகில் இருந்த படி அவர் எங்களுடன் உரையாடினார்.

இதேவேளை உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கணங்களில் உயிர் தப்பியவர்கள் அரசாங்கத்தின் புனர்வாழ்வு முகாம்களில் ஓரு சில மாதங்களோ அல்லது வருடங்களோ வாழ்ந்துவிட்டு தங்கள் வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்காக தங்கள் நகரத்திற்கு திரும்பியுள்ளனர்.

இராமசாமி குடும்பத்தினரும் இவ்வாறு ஓருவருடம் முகாமில் வாழ்ந்துவிட்டு தங்கள் பகுதிக்குடி திரும்பிய வேளை அவர்களிற்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களது வீடு தரைமட்டமாக காட்சியளித்தது.

1c372dd4-33d5-4063-a51e-509fd0a6d139

நான் எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஐவரை புதைத்த அந்த இடத்திற்கு மீண்டும் சென்றேன். அதன் மேல் ஐந்து மரங்கள் வளர்ந்துகொண்டிருந்தன நான் அப்படியே விட்டுவிட்டேன் என நினைவுகூர்ந்தார் சரஸ்வதி- பின்னர் அவரது குரல் மௌனமாகியது.

விடுதலைப்புலிகளால் தனது மூத்த மகள் படையணிகளில் சேர்க்கப்படுவதை தடுப்பதற்காக தான் சிரமப்பட்ட நாட்களை இராமசாமி வர்ணித்தார். பல குடும்பங்கள் உயிர்களையும் உடமைகளையும் இழந்த போதிலும் அவர்களில் சில அதிஸ்டசாலிகளும் உள்ளனர். இராசாமி குடும்பத்தையும் அந்த பட்டியலில் சேர்க்கலாம்.

அவர்கள் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் தங்கள் பகுதிக்கு மீண்டும் திரும்பிய வேளை வீடு முற்றாக அழிந்துபோயிருந்தது. தற்போது அவர்கள் புதிய வீடொன்றில் வாழ்ந்துவருகின்றனர். 2012 இல் அவரது மூத்த மகள் மோகனதர்சினி கிளிநொச்சியில் உள்ள ஆடைதொழிற்சாலையில் வேலை பார்க்க தொடங்கினார். ஆரம்பத்தில் அவரிற்கு உற்பத்தி பிரிவில் வேலைபார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. மாதம் ஓன்றிற்கு 80 டொலர்கள் சம்பளம் வழங்கப்பட்டது. நெல்வயல்களே வேலைவாய்ப்பிற்கான ஒரே வழியாக காணப்பட்ட அந்த காலப்பகுதியில் அது அவரிற்கு அதிஸ்டாகவே அமைந்தது.தற்போது அவர் மாதமொன்றிற்கு 150 டொலர்கள் ஊதியமாக பெறுகின்றார். மடிக்கணணியில் பணியாற்றுகின்றார்.

இந்த வேலை காரணமாக என்னால் உழைக்க முடிந்தது. வீட்டிற்கு பணம் செலுத்த முடிந்தது என மோகனதர்சினி குறிப்பிட்டார். அவரது வருமானத்தை கொண்டே அவரது தந்தை தரைமட்டமாகியிருந்த வீட்டை புதிதாக கட்டினார். இது தவிர சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கான அரசாங்கத்தின் நிதியுதவியும் அவர்களிற்கு கிடைத்தது.

மோக தர்சினி தனது மாமாவின் மகளான 15 தமிழ்ச்செல்வியின் கல்விக்கான செலவையும் தான் ஏற்றுக்கொண்டுள்ளார். மோகனதர்சினியின் மாமாவின் குடும்பத்தில் எஞ்;சியவர் தமிழ்ச்செல்வி மாத்திரமே,ஏனைய அனைவரும் பதுங்குழிக்குள் கொல்லப்பட்டனர்.

அவர்களது முகங்கள் அந்த வீட்டின் முன்னாள் காணப்படும் புகைப்படத்திலிருந்து அவர்களின் முகங்கள் எங்களை பார்த்தபடியிருந்தன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *