Search
Saturday 23 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஒரு சத்­திய வேள்­வியின் அர­சியல் பெறு­மதி?

ஒரு சத்­திய வேள்­வியின் அர­சியல் பெறு­மதி?

வீரகத்தி தனபாலசிங்கம் 

மகாத்மா காந்தி மனித குலத்­திடம் கைய­ளித்­து­விட்­டுச்­சென்ற ஆயுதம் அகிம்சை. அந்த ஆயு­தமே இந்­தி­யா­வுக்கு பிரிட்டிஷ் கால­னித்­துவ ஆட்­சி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து விடு­த­லையைப் பெற்­றுக்­கொ­டுத்­தது என்று நம்­பு­கின்றோம். ஆனால், இன்­றைய உலக சூழ்­நி­லையில் அகிம்­சையை அர­சியல் ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்­து­வதில் இருக்­கக்­கூ­டிய நடை­முறைச் சாத்­தியப் பிரச்­சினை குறித்து பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்கள் முன்­வைக்­கப்­ப­டவே செய்­கின்­றன. வன்­முறை இல்­லாத உலகம், போர் இல்­லாத உலகம் என்ற கருத்து எவ­ரையும் கவ­ரக்­கூ­டி­யது என்­பதில் சந்­தே­க­மில்லை. நிதான புத்­தி­யு­டைய எவ­ருமே வன்­மு­றையை வன்­முறை என்­ப­தற்­காக விரும்­பு­வ­தில்லை. ஆனால், எம்மைச் சூழ்ந்­தி­ருக்­கின்ற இன்­றைய உல­கிலே காணப்­ப­டக்­கூ­டி­ய­தாக இருக்­கின்ற வன்­மு­றை­க­ளுக்கு மத்­தியில் அகிம்­சையை அர­சியல் ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்­து­வதில் பய­னு­று­தி­யு­டைய விளைவைப் பெற­மு­டி­யுமா என்ற கேள்­விக்கு காந்­தி­ய­வா­தி­க­ளினால் கூட தடு­மாற்றம் இன்றி பதில் சொல்­வ­தென்­பது முடி­யாத காரி­ய­மே­யாகும்.

மகாத்மா காந்­தியின் பிறந்த தின­மான அக்­டோபர் இரண்டாம் திக­தியை ஐக்­கிய நாடுகள் சபை சர்­வ­தேச அகிம்சை தின­மாக பிர­க­டனம் செய்து அனுஷ்­டித்து வரு­கின்­றது. அன்­றைய தினத்தில் புது­டில்­லியில் ராஜ்­காட்டில் அமைந்­தி­ருக்கும் காந்தி சமா­திக்கு தவ­றாமல் சென்று மலர் தூவி அஞ்­சலி செய்யும் இந்­திய அர­சியல் தலை­வர்கள் அகிம்சை என்­பது வாழ்க்கை முறை­யா­கவும் ஆட்­சிக்­கான வழி­வ­கை­யா­கவும் இன்றும் கூட பொருத்­த­மா­ன­தா­கவே இருக்­கி­றது என்றும் அகிம்சை உண்­மையில் துணிச்சல் உள்­ள­வர்­களின் ஆயு­தமே தவிர, கோழை­களின் ஆயு­த­மல்ல என்றும் போத­னைகள் செய்­வ­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. ஆனால், அர­சியல் கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி தங்கள் சொந்த மண்­ணி­லேயே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற அகிம்சைப் போராட்­டங்கள் தொடர்­பி­லான அர­சியல் சமு­தா­யத்தின் அணு­கு­மு­றைகள் இந்­திய ஜன­நா­ய­கத்­தையும் அகிம்சைக் கோட்­பாட்­டையும் கேள்­விக்­குள்­ளாக்­கிய பல நிகழ்வுப் போக்­கு­களை நாம் கண்­டு­வந்­தி­ருக்­கின்றோம். அர­சி­யல்­வா­தி­கள்தான் அவ்­வா­றென்றால் இந்­திய மக்­க­ளும்­கூட அகிம்சைப் போராட்­டங்கள் பற்­றியும் அகிம்சைப் போரா­ளிகள் பற்­றியும் அனு­தா­ப­மற்ற ஒரு மனப்­போக்கை வளர்க்க ஆரம்­பித்­து­விட்­டார்கள் போலத் தெரி­கி­றது. கடந்த வாரத்­தைய அர­சியல் நிகழ்­வொன்று இத்­த­கைய எண்­ணத்தை தவிர்க்க முடி­யாமல் ஏற்­ப­டுத்­து­கி­றது.

Gandhi1300px

இந்­தி­யாவில் அண்­மையில் நடை­பெற்ற ஐந்து மாநி­லங்­களின் சட்­ட­சபைத் தேர்தல் முடி­வுகள் கடந்த வாரம் வெளி­யா­கின. வட­கி­ழக்கு மாநி­ல­மான மணிப்­பூரும் அதில் ஒன்று. சர்­வ­தேச மனித உரி­மைகள் இயக்­கங்­களின் கவ­னத்தைப் பெற்ற கார­ணத்­தினால் வெளி­யு­லகில் அண்­மைய ஒன்­றரைத் தசாப்­தங்­க­ளுக்கும் கூடு­த­லான காலத்தில் செய்­தி­களில் பெரி­தாக அடி­பட்ட மாநிலம் அது. அதற்குக் கார­ண­மாக இருந்­தவர் சர்ச்­சைக்­கு­ரிய பாது­காப்புச் சட்டம் ஒன்­றுக்கு எதி­ராக 16 வரு­ட­காலம் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை நடத்தி உலகின் மிகவும் நீண்­ட­கால உண்­ணா­வி­ரதப் போராளி என்று வர்­ணிக்­கப்­படும் 44 வய­தான இரோம் ஷானு சர்­மிளா என்ற பெண்­மணி. மனச்­சாட்­சியின் கைதி (prisoner of conscience) என்று அவரை சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை பிர­க­டனம் செய்­தி­ருந்­தது.

சுமார் 60 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இந்­திய அர­சாங்­கத்­தினால் நிறை­வேற்­றப்­பட்ட ஆயுதப் படைகள் விசேட அதி­கா­ரங்கள் சட்டம் (Armed forces special powers Act) மணிப்பூர் உட்­பட இந்­தி­யாவின் 7 மாநி­லங்­களில் நடை­மு­றையில் இருக்­கி­றது. அர­சுக்கு எதி­ராக ஒரு நபர் செயற்­ப­டு­கின்றார் என்று சந்­தேகம் எழும்­பட்­சத்தில் அழைப்­பா­ணை­யின்றி அவரைக் கைது­செய்­யவும் உடை­மை­களைச் சோத­னை­யி­டவும் படை­ப­லத்தைப் பிர­யோ­கிக்­கவும் ஆயுதப் படை­க­ளுக்கு அச்­சட்டம் விசேட அதி­கா­ர­ம­ளிக்­கி­றது.

பல தசாப்­தங்­க­ளாக கிளர்ச்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த மணிப்­பூரில் இந்தக் கொடூ­ர­மான சட்­டத்தைப் பயன்­ப­டுத்தி ஆயுதப் படைகள் படு­மோ­ச­மான மனித உரிமை மீறல்­களைச் செய்­து­கொண்­டி­ருந்­தன. மாநிலத் தலை­நகர் இம்­பா­லுக்கு அண்­மை­யாக மலோம் என்ற நகரில் பஸ் தரிப்­பி­டத்தில் காத்­துக்­கொண்­டி­ருந்த 10 குடி­மக்­களை 2000 நவம்பர் 2ஆம் திகதி ‘அசாம் ரைபிள்’ என்று அழைக்­கப்­ப­டு­கின்ற இந்­திய பரா இரா­ணுவப் படை­யினர் சுட்­டுக்­கொலை செய்­தனர். இச்­சம்­பவம் பிறகு ‘மலோம் படு­கொ­லைகள்’ என்று அழைக்­கப்­பட்­டது. மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ராகக் குரல்­கொ­டுக்கும் உள்ளூர் சமா­தான இயக்­கங்­களின் செயற்­பா­டு­களில் ஏற்­க­னவே தன்னை இணைத்­துக்­கொண்ட சர்­மிளா பாது­காப்புப் படை­க­ளுக்கு மட்­டு­மீ­றிய அதி­கா­ரங்­களை வழங்கும் சட்­டத்தை வாபஸ்­பெற வேண்­டு­மென்ற கோரிக்­கையை முன்­வைத்து மலோம் படு­கொ­லை­க­ளுக்கு மூன்றாம் நாள்  2000 நவம்பர் 5ஆம் திகதி தனது சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தைத் தொடங்­கினார். அப்­போது அவ­ருக்கு 28 வயது. தனது இலட்­சியம் நிறை­வேறும் வரை உண்­ணவோ, குடிக்­கவோ, தலை வாரவோ, அல்­லது கண்­ணா­டியில் முகம் பார்க்­கவோ கூட போவ­தில்லை என்று அவர் சபதம் எடுத்தார். பாது­காப்புப் படைகள் விசேட அதி­கா­ரங்கள் சட்டம் வாபஸ் பெறப்­படும் வரை தனது வீட்­டுக்குள் பிர­வே­சிக்­கப்­போ­வ­தில்லை என்றும் தனது தாயாரைச் சந்­திக்­கப்­போ­வ­தில்லை என்றும் அவர் உறு­தி­யெ­டுத்தார். தாயாரை நேரில் பார்த்தால் தனது உறு­திப்­பாடு குலைந்­து­விடும் என்று அவர் நினைத்­ததே அதற்குக் கார­ண­மாகும். கொடிய பாது­காப்புச் சட்டம் ரத்துச் செய்­யப்­பட்ட பின்­னரே தாயாரின் கையால் ஒரு பிடி சோறு சாப்­பி­டுவேன் என்றும் அவர் அறி­வித்தார்.

இம்பால் நகரின் மத்­தியில் அமைந்­தி­ருக்கும் தியா­கிகள் நினை­வா­ல­யத்தில் உண்­ணா­வி­ர­த­மி­ருந்த சர்­மி­ளாவை மூன்று தினங்­களில் கைது­செய்த பொலிஸார் தற்­கொலை முயற்­சியில் ஈடு­பட்­ட­தாகக் குற்­றஞ்­சாட்டி நீதி­மன்றக் காவலில் வைத்­தனர். அன்று முதல் அவரை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்த பொலிஸார் மருத்­து­வர்­களின் உத­வி­யுடன் மூக்குத் துவா­ரங்­களின் ஊடாக குழாய்­களைப் பொருத்தி வலுக்­கட்­டா­ய­மாக நீரா­கா­ரங்­களைச் செலுத்­திக்­கொண்­டி­ருந்­தார்கள். இது 16 வரு­டங்­க­ளாகத் தொடர்ந்­தது. சர்­மிளா தனது உறு­திப்­பாட்டில் தள­ர­வில்லை.

Iron-Sharmila

பாது­காப்புப் படை­க­ளுக்கு மட்­டு­மீ­றிய அதி­கா­ரங்­களை வழங்கும் அந்தச் சட்­டத்­துக்கு எதி­ராக மணிப்பூர் மக்கள் தங்­களால் இயன்ற சகல வழி­வ­கைகள் மூல­மா­கவும் ஆட்­சே­பத்தை வெளிக்­காட்டி வந்­தி­ருக்­கி­றார்கள். தாய்­மார்­களின் நிர்­வாண ஊர்­வலம், மாணவர் அமைப்­புக்­களின் தலை­வர்­களின் தீக்­கு­ளிப்பு, பிர­மாண்­ட­மான ஆர்ப்­பாட்டப் பேர­ணிகள், உச்ச நீதி­மன்­றத்தில் வழக்குக் தாக்கல், ஐக்­கிய நாடுகள் சபையின் அமைப்­புக்­க­ளிடம் முறை­யீடு என்­ப­வையும் அந்தப் போராட்­டங்­களில் அடங்கும். ஆனால், சர்­மி­ளாவின் கோரிக்­கையை இந்­திய மத்­திய அர­சாங்­கமோ அல்­லது மணிப்பூர் மாநில அர­சாங்­கமோ திரும்பிப் பார்க்­க­வே­யில்லை. பிரி­வி­னை­வாத இயக்­கங்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு இச்­சட்டம் அவ­சி­ய­மா­னது என்று கூறிய அர­சாங்கம் அதை வாபஸ்­பெறப் போவ­தில்லை என்று திட்­ட­வட்­ட­மாக இடை­ய­றாது அறி­வித்­துக்­கொண்­டே­யி­ருந்­தது. அதே­வேளை, சர்­மி­ளாவின் உண்­ணா­வி­ர­தத்தை தொட­ர­விட்டு அவர் உயிர் துறப்­பதை அனு­ம­திக்­கவும் எந்த அர­சாங்­கமும் தயா­ரா­யி­ருந்­த­து­மில்லை. மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ரான போராட்­டங்­க­ளுக்கு தார்­மீக வலுவைக் கொடுக்­கக்­கூ­டிய ஒரு அர­சியல் சூழ்­நி­லையை சர்­மி­ளாவின் உண்­ணா­வி­ரதப் போராட்டம் தோற்­று­வித்­து­வி­டா­தி­ருப்­பதை உறு­தி­செய்­வ­தி­லேயே அர­சாங்கம் குறி­யாக இருந்­து­வந்­தது.

தற்­கொலை முயற்சிக் குற்­றத்­துக்­காக கூடு­தல்­பட்சம் சர்­மி­ளா­வுக்கு சட்­டப்­படி ஒரு­வ­ருடச் சிறைத்­தண்­ட­னை­யையே விதிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ஒரு­வ­ருடம் பூர்த்­தி­யா­னதும் அவரை விடு­வித்த பொலிஸார் பிறகு மறு­நாளே கைது செய்­தனர். இவ்­வா­றாக விடு­த­லையும் கைது­மாக 16 வரு­டங்கள் தொடர்ந்து கொண்­டி­ருந்­தது.

2004 அக்­டோ­பரில் சர்­மிளா விடு­தலை செய்­யப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ளர்கள் அவரை இம்பால் விமான நிலை­யத்தில் கடு­மை­யான பாது­காப்­புக்கு மத்­தி­யிலும் இர­க­சி­ய­மாக விமா­னத்தில் ஏற்றி புது­டில்­லிக்கு அனுப்­பி­வைத்­தனர். தலை­ந­கரில் வந்­தி­றங்­கிய அவர் நேர­டி­யாக காந்தி சமா­திக்குச் சென்று மலர்­தூவி அஞ்­சலி செய்தார். “மணிப்பூர் மக்­க­ளுக்கு கொடு­மை­களைச் செய்யும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு மட்­டு­மீ­றிய அதி­கா­ரங்­களை வழங்கும் சட்­டத்தை வாபஸ் பெற­வேண்­டு­மென்ற எனது கோரிக்கை நிறை­வே­றா­ம­லேயே நான் சாக­வேண்­டு­மென்றால், மரணப் படுக்­கையில் வீழ்­வ­தற்கு முன்­ன­தாக மகாத்மா காந்­தியின் ஆசீர்­வா­தத்தைப் பெற்­றுக்­கொள்ள விரும்­பு­கின்றேன்” என்று அச்­சந்­தர்ப்­பத்தில் அவர் செய்­தி­யா­ளர்கள் மத்­தியில் கூறி­யி­ருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சர்­மி­ளாவின் உண்­ணா­வி­ரதம் அடிப்­படை மனித உரி­மை­க­ளுக்­கான போராட்­டங்­களின் வர­லாற்றில் முன்­னென்­று­மில்­லாத சத்­திய வேள்­வி­யாக மாறி­யி­ருந்­தது. 2010ஆம் ஆண்டில் ஆசிய மனித உரி­மைகள் ஆணைக்­குழு அவ­ருக்கு வாழ்நாள் சாத­னை­யாளர் விருது வழங்கி அவ­ரது போராட்­டத்தைக் கௌர­வித்­தது. அதே­வ­ருடம் பிற்­ப­கு­தியில் இந்­திய திட்­ட­மிடல் மற்றும் முகா­மைத்­துவ நிறு­வனம் 51 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ரவீந்­தி­ரநாத் தாகூர் சமா­தானப் பரிசை அவ­ருக்கு வழங்­கி­யது.

2013ஆம் ஆண்டில் அவரை மனச்­சாட்­சியின் கைதி என்று பிர­க­டனம் செய்த சர்­வ­தேச மன்­னிப்புச் சபை தனது நம்­பிக்­கை­களை அற­வ­ழியில் வெளிப்­ப­டுத்­து­கின்ற ஒரே கார­ணத்­துக்­கா­கவே அவர் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார் என்று கூறி­யது. 2014 சர்­வ­தேச மகளிர் தினத்தில் அமெ­ரிக்­காவின் மைக்ரோ சொப்ற் நெற்வேர்க் (MSN)செய்திச் சேவை நடத்­திய வாக்­கெ­டுப்பில் சர்­மிளா இந்­தி­யாவின் மிக உயர்ந்த பெண்­மணி (The Top Woman Icon of India) யாகத் தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருந்தார். 2014 பாரா­ளு­மன்ற தேர்­தலில் போட்­டி­யி­டு­மாறு இரு கட்­சிகள் கேட்­ட­போ­திலும் அவர் மறுத்­து­விட்டார்.

இவ்­வா­றாக அகிம்சைப் போராட்­டத்தின் ஒரு சின்­ன­மாக நோக்­கப்­பட்ட சர்­மிளா ஒரு கட்­டத்­துக்கு மேல் தனது போராட்­டத்தின் மூல­மாக இலட்­சி­யத்தை அடை­வது சாத்­தி­ய­மில்லை என்­பதை உணர்ந்­து­விட்டார் போலும். அவ­ருக்கு எதி­ரான தற்­கொலை முயற்சி குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்து இம்பால் நீதி­மன்றம் தடுப்புக் காவலில் இருந்து 2016 நடுப்­ப­கு­தியில் விடு­தலை செய்­த­போது தனது தந்­தி­ரோ­பா­யத்தை மாற்­ற­வேண்­டி­யி­ருக்­கி­றது என்று அவர் அறி­வித்தார். “எனது உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை முடி­வுக்கு கொண்­டு­வர விரும்­பு­கின்றேன். மாநில சட்­ட­சபைத் தேர்­தலில் அர­சாங்­கத்தை எதிர்த்துப் போட்­டி­யிடப் போகிறேன். எனது தந்­தி­ரோ­பா­யத்தை மாற்­ற­வேண்­டி­யி­ருக்­கி­றது. அர­சி­யலில் இறங்க நான் விரும்­பு­வதால் என்னை ஒரு விசித்­தி­ர­மான பெண்­ணாக சிலர் பார்க்­கி­றார்கள். அர­சியல் அழுக்கு நிறைந்­தது என்று அவர்கள் கூறு­கி­றார்கள். ஆனால், சமூ­கமும் கூட அழுக்­கா­ன­தா­கவே இருக்­கி­றது. வேறு­பட்ட வடி­வி­லான கிளர்ச்­சி­யொன்றை நடத்தத் தீர்­மா­னித்­தி­ருக்­கின்றேன். ஏனென்றால், 16 வரு­டங்­க­ளாக நான் முன்­னெ­டுத்த உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­தி­லி­ருந்து என்னால் எதையும் வென்­றெ­டுக்க முடி­ய­வில்லை” என்று அவர் கூறினார்.

2016 ஆகஸ்ட் 9ஆம் திகதி சில துளிகள் தேனை சுவைத்­த­வாறு தனது உண்­ணா­வி­ர­தத்தைக் கைவிட்ட சர்­மிளா பாது­காப்புச் சட்டம் இரத்துச் செய்­யப்­பட்ட பின்னர் மாத்­தி­ரமே தாயாரை சந்­திப்­ப­தாக முன்னர் சபதம் எடுத்­துக்­கொண்ட கார­ணத்தால் வீட்­டுக்குச் செல்­ல­வில்லை. ஆச்­சி­ரமம் ஒன்­றி­லேயே தங்­கி­யி­ருந்தார். மணிப்­பூரில் பல முன்­னேற்­ற­க­ர­மான மாற்­றங்­களை கொண்­டு­வ­ரு­வதில் தனக்­கி­ருக்கும் இலட்­சி­யத்தை வெளிப்­ப­டுத்­திய அவர் முத­ல­மைச்­ச­ராக வர­வி­ரும்­பு­வ­தா­கவும் பகி­ரங்­க­மாக அறி­வித்தார். இந்­தி­யாவில் ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ராக காந்­தி­ய­வாதி அண்ணா ஹஸா­ரே­யுடன் சேர்ந்து அற­வழிப் போராட்­டங்­களில் ஈடு­பட்ட அரவிந்த் கெஜ்­ரிவால் ஆம் ஆத்மி கட்­சியை ஆரம்­பித்து மிகவும் குறு­கிய காலத்­திற்­குள்­ளா­கவே காங்­கிரஸ் கட்­சி­யையும் பார­திய ஜனதா கட்­சி­யையும் படு­தோல்­வி­ய­டையச் செய்து டில்லி முத­ல­மைச்­ச­ராக வந்­தது போன்று மணிப்­பூரில் தன்னால் செய்­து­காட்ட முடி­யு­மென்று சர்­மிளா நம்­பி­னார்­போலும். உண்­ணா­வி­ர­தத்தை கைவிட்ட சில நாட்­களில் தன்னை அணு­கிய பார­திய ஜனதா கட்­சி­யினர் தங்­களின் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட முன்­வந்தால் 36 கோடி ரூபா தரு­வ­தாகக் கூறி­ய­தா­கவும் சர்­மிளா தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் அதை பார­திய ஜனதா மறுத்­தி­ருந்­தது.

Irom_Sharmila_detained_again_-_6-_wm

கடந்த வருடம் அக்­டோ­பரில் மக்கள் மீள் எழுச்சி நீதிக் கூட்­ட­மைப்பு (People’s Resurgence and Justice Alliance) என்ற பெயரில் புதிய கட்­சியை ஆரம்­பித்த அவர் அண்­மையில் நடை­பெற்ற மணிப்பூர் சட்­ட­சபைத் தேர்­தலில் வெறு­மனே 6 தொகு­தி­களில் மாத்­தி­ரமே வேட்­பா­ளர்­களைக் கள­மி­றக்கக் கூடி­ய­தாக இருந்­தது. மூன்று தட­வைகள் காங்­கிரஸ் முத­ல­மைச்­ச­ராக இருந்த ஒக்ராம் இபோபி சிங்கை எதிர்த்து தோபால் என்ற தொகு­தி­யி­ல் சர்­மிளா போட்­டி­யிட்டார்.

அவ­ரது கட்­சியை ஆத­ரிக்­கு­மாறு இட­து­சாரிக் கட்­சி­களும் அரவிந்த் ஜெக்­ரி­வாலும் மணிப்பூர் மக்­க­ளுக்கு வேண்­டுகோள் விடுத்­தனர். தேர்தல் செல­வு­க­ளுக்­காக சமூக ஊட­கங்கள் மூல­மாக நிதியைத் திரட்­டு­வதில் ஈடு­பட்ட சர்­மிளா கட்­சிக்கு ஜெக்­ரி­வாலும் 50 ஆயிரம் ரூபா பணத்தை வழங்கி உதவி செய்தார். தன்னால் வெற்­றி­பெற முடி­யு­மென்று சர்­மிளா தொடர்ச்­சி­யாக கூறிக்­கொண்டு வந்தார். படை­யி­னரின் கொடு­மை­க­ளுக்கு எதி­ராக மணிப்பூர் மக்­க­ளுக்­காக தனது இளமைக் காலத்தை தியாகம் செய்து முன்­னெ­டுத்த அகிம்சைப் போராட்டம் தனக்கு பேரா­த­ரவைப் பெற்­றுத்­தரும் என்று அவர் நம்­பினார். ஊட­கங்­க­ளிலும் கூட பெரும் எதிர்­பார்ப்­புகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன.

ஆனால், தேர்தல் முடி­வுகள் கடந்த வாரம் வெளி­யா­ன­போது என்ன நடந்­தது சர்­மி­ளா­வுக்கு என்ற கேள்­வியே மிஞ்­சி­யது. வெறு­மனே 90 வாக்­கு­க­ளையே அவரால் பெறக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இரும்புப் பெண்­ம­ணி­யென்று வர்­ணிக்­கப்­பட்ட அவ­ருக்கு கிடைத்த வாக்­கு­களைக் காட்­டிலும் எவ­ருக்கும் வாக்­க­ளிக்க விரும்­ப­வில்லை என்று பதி­வு­செய்த வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்கை (NOTA) அதி­க­மாக இருந்­தது.

மனித உரி­மை­க­ளுக்­கான தியா­க­மிகு போராட்­டத்தை முன்­னெ­டுத்து உலகின் கவ­னத்தை ஈர்த்­தி­ருந்த ஒரு ஜன­நா­யகப் போராளி திடீ­ரென்று  மதிப்­பே­து­மற்­ற­வ­ராக ஒருவராக மாறிய விப­ரீ­தத்தைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. சர்­மி­ளாவை ஒரு அகிம்சைப் போரா­ளி­யாக மாத்­தி­ரமே பார்ப்­பற்கு மணிப்பூர் மக்கள் விரும்­பி­னார்­களா? தேர்தல் அர­சி­யலில் ஈடு­பட்டு ஒரு சாதா­ரண அர­சி­யல்­வா­தி­யாக அவர் மாறு­வதை மக்கள் விரும்­ப­வில்­லையா? அகிம்சைப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­ததில் அவர் காட்­டிய மன உறுதி தேர்தல் அர­சி­ய­லுக்கு வெற்­றி­க­ர­மான பாதையை அமைப்­ப­தற்கு போது­மா­ன­தல்ல என்று அர்த்­தமா? சுய­தி­யாகம் தேர்­தல்­களில் வெற்­றி­பெ­று­வ­தற்கு போது­மா­ன­தல்ல என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றதா?

மக்கள் தன்னைக் கைவிட்டு விட்­டார்கள் என்று தனது ஏமாற்­றத்தை வெளிக்­காட்ட சர்­மிளா தயங்­க­வில்லை. கடந்­த­வாரம் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய அவர் “தேர்தல் முடி­வு­களைப் பார்த்த பிறகு அர­சி­யலில் எனக்கு வெறுப்பு வந்­து­விட்­டது. நான் பிர­சா­ரங்­களில் ஈடு­பட்­ட­போது மக்கள் என்­மீது அனு­தாபம் காட்­டி­னார்கள். ஆனால், அவர்­களின் மனங்­களில் ஏற்­பட்ட முரண்பாட்டை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை” என்று கவலையுடன் குறிப்பிட்டார். அத்துடன் தனது உடனடித் திட்டம் கேரளாவிலோ அல்லது பெங்களூரிலோ உள்ள ஆச்சிரமம் ஒன்றுக்குச் சென்று தியானம் செய்து தன்னிலை விளக்கம் பெறுவதே என்றும் கூட அவர் கூறினார்.

irom-sharmila-759

சர்மிளா தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு தேர்தல் அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த வருடம் அறிவித்தபோது இந்திய அரசியல் ஆய்வாளரான ராகுல் ஜெயராம் என்பவர் தெரிவித்த கருத்தை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

“தியாகிகளும் மனிதப் பிறவிகளாக இருப்பதற்கான உரிமையைக் கொண்டிருக்கிறார்கள். அடிக்கடி மாறுகின்ற தன்மையுடைய மக்களின் அபிப்பிராயங்களை அவர் தெரிந்துகொண்டிருக்கக்கூடும். ஒரே இலட்சியத்தை அடைவதை நோக்கி வழிமுறையை மாற்றுவதன் மூலம் மக்களின் ஆதரவை இழக்கவும் கூடும். இது ஒரு புரியாப்புதிர். 16 வருடங்களாக சர்மிளா ஒரு போராட்டத்தையே நடத்தினார். இப்போது அவர் இரு போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது. முதலாவது போராட்டம் தனிநபர் கிளர்ச்சி. இரண்டாவது போராட்டம் கூட்டுப் போராட்டம். முதலாவதை விடவும் இரண்டாவது கஷ்டமானதாக இருக்கக்கூடும்.”

“சர்மிளாவைப் பொறுத்தமட்டில் அவர் மக்களைத் திரட்டியதே இல்லை. மக்களோடு நின்று சில பிரச்சினைகளிலாவது ஒரு வெற்றியைக் காட்ட முடிந்ததுமில்லை. அத்தோடு ஒரு மாநில அளவிலான பிரச்சினையில் பலதரப்பட்ட மக்களையும் திரட்டி நிறுத்தவும் முடியவில்லை. 16 வருடம் தொடர் உண்ணாவிரதம் என்பதெல்லாம் ஒரு தனிநபர் செயற்பாடுதான். தனிநபர் செயற்பாடுகளுக்கும் சாகசங்களுக்கும் மக்களின் அனுதாபமும், ஆதரவும், வியப்பும், பாராட்டும் மட்டுமே உண்டு. ஆனால், அவர்களை மக்களால் பின்பற்ற முடியாது” என்ற தமிழக பேராசிரியர் அ.மார்க்ஸின் முகநூல் பதிவு சிந்தனைக்குரியது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *