Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொல்லப்பட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் குறித்த விசாரணைகளும் இன்னமும் பூர்த்தியாகவில்லை

கொல்லப்பட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் குறித்த விசாரணைகளும் இன்னமும் பூர்த்தியாகவில்லை

ஜொகான் மைக்கல்சன்

இலங்கை முன்னரை போன்று தற்போது ஊடக சுதந்திரத்திற்கு ஆபத்தான நாடாக கருதப்படுவதில்லை. எனினும் இருண்ட யுகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் படுகொலைகள் அனைத்து குறித்து விசாரணைகளும் பூர்த்தியாகதநிலையிலுள்ளன. இதில் 2005 ஏப்பிரல் 28 ம் முக்கியமானது அன்றைய தினமே இலங்கை ஊடகஉலகில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய சிவராம் கடத்தி படுகொலைசெய்யப்பட்டார்.

அவரது உடல் கோட்டேயில் பாராளுமன்றம் அமைந்துள்ள பாதுகாப்பு வலயப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது,அந்த கொலை ஊடக உலகில் உள்ள அவரது சகாக்கள் மற்றும் நண்பர்கள், மற்றும் தமிழர்கள் மீது கடும் தாக்கத்தை செலுத்தியது,அடுத்து வந்த சில வருடங்களில் மேலும் பல பத்திரிகையாளர்களும் ஊடகபணியாளர்களும் தங்கள் பணி;க்கான விலையை செலுத்தினார்கள்.அவர்களது குடும்பத்தவர்களும் நண்பர்களும் துயரத்தில் சிக்குண்டனர்.

press_freedom_sri_lanka

2015 இல் குறிப்பிட்டர அரசாங்கத்தின் தலைவரும் அரசாங்கமும் பதவியிலிருந்து அகற்றப்பட்டது குறித்து பெருமளவு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்- அனைவரும் இல்லை. பாரிசை சேர்ந்த ஊடக கண்காணிப்பு அமைப்பான எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பின் ஊடக சுதந்திர குறிகாட்டியில் இது வெளிப்பட்டுள்ளது.  இலஙகை 165 வது இடத்திலிருந்து 141 வர் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 141 என்பது இன்னமும் பாரதூரமான நிலையே ஆனால் பலவிடயங்கள் நேர்பாதையில் நிகழ்கின்றன.

2015 இல் இலங்கைக்கு நான் விஜயம் மேற்கொண்ட வேளைஅது பாராளுமன்ற தேர்தல் காலம். ஊடகவியலாளர்களின் கண்களில் இந்த நிம்மதி தெரிந்தது, தென்பட்டது,எனினும் சில சந்தேகங்கள் இன்னமும் காணப்படுகின்றன.

சில கருத்துக்கணிப்புகள் பெரும்பான்iயான சிங்களவர்கள் இன்னமும் மகிந்தவிற்கு ஆதரவளிப்பதை வெளிப்படுத்தியுள்ளன. எனினும் இது இடம்பெறவில்லை,ஜனாதிபதி தேர்தல் மூலம் ஏற்பட்ட மாற்றத்தை வாக்காளர்கள் உறுதிசெய்தனர். ஜனாதிபதியும். பிரதமரும் ஊடக சுதந்திரத்திற்காக பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளனர்.

இலங்கை பத்திரிகiயாளர்கள் இன்று அதிகளவிற்கு நிம்மதியாகவுள்ளனர்,ஏனைய உலக நாடுகளை போன்று இதழியல் மூலம் சமூகத்திற்கு பங்களிப்பாற்ற விரும்புகின்றனர். ஊடக நிறுவனங்கள் தங்கள் பொருளாதாரங்கள் குறித்து கவலைகொண்டுள்ளன. ஆனேக தருணங்களில் ஊதியத்தை வழங்காமல் எப்படி ஊடகவியலாளர்களிடமிருந்து பணியை வாங்குவது என்பது குறித்துn சிந்திக்கின்றன. தங்கள் தொழிற்துறையின் எதிர்காலம்குறித்து நம்பிக்கையுடன் இருப்பதற்கு பத்திரிகையாளர்கள் முயல்கின்றனர். அவர்களிற்கு கவலைகள் உள்ளன. ஆனால் தங்கள் உயிர் குறித்த அச்சம் இல்லை,சுய தணிக்கை என்பது இன்னமும் காணப்படுவதாகவும், இது உண்மையை கண்டறிவதற்கு தடையாகவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழர்களிற்கு எதிரான இராணுவத்தினரின் பாலியல் வன்முறைகள் குறித்து எழுதுவது மிகவும் கடினமான விடயம் என பத்திரிகையாளர் ஓருவர் தெரிவித்தார்.

பல வருடங்களாக வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் யதாhர்த்ங்களாக காணப்பட்டன,கடந்த ஓரு வருட காலமாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன,இந்த மாற்றம் குறிப்பிடத்தக்கது,தமிழர்களிற்கு எதிராக படையினர் புரிந்த பாலியல் வன்முறைகளை விசாரிக்க தயங்குவதன் மூலம் பத்திரிகையாளர்களும், நிறுவன தலைவர்களும் மக்களின் உணர்வுகளை மாற்றுவதற்கு தயங்குகின்றனர்.

அறிக்கைகளை அல்லது செய்திநிறுவனங்களின் தகவல்களை வெளியிடலாம் ஆனால் நீங்கள் விசாரணை செய்து கட்டுரைகளை எழுதுவது என்பது பாரிய நடவடிக்கையாக காணப்படுகின்றது என பத்திரிகையாளர் ஓருவர் தெரிவித்தார்.

இன்னமும் செய்து முடிக்கப்படவேண்டிய விடயங்கள் பல உள்ளன, தகவல் சுதந்திர சட்ட மூலம் இன்னமும் நகல்வடிவத்திலேயே காணப்படுகின்றது,யுத்தத்தின் காயங்கள் ஆறவேண்டும் என்றால் கடந்த காலங்களை புறக்கணிக்க முடியாது,பத்திரிகையாளர்கள் பலரின் ( பெருமளவிற்கு தமிழர்கள்) படுகொலைகள் குறித்து இன்னமும் விசாரணைகள் இடம்பெறாததை கொலையாளிகள் சுதந்திரமாக நடமாடலாம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளமாக கருதலாம்.

நுpலைமாற்றுக்கால நீதியின் மூலம் புதிய நீதியான சமூகம் கட்டியெழுப்படவேண்டும்,இது இடம்பெறுவதற்கு கடந்த கால குற்றங்கள் உரிய முறையில் கையாளப்படவேண்டும்,புதிய ஆட்சியாளர்கள் தாங்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *