Search
Saturday 20 October 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சஞ்­ச­ல­மான சக­வாழ்வின் எதிர்­காலம்?

சஞ்­ச­ல­மான சக­வாழ்வின் எதிர்­காலம்?

வீரகத்தி தனபாலசிங்கம்  ( எஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஆலோசக ஆசிரியர் )

ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் சேர்ந்து தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்தை அமைத்து இரு வரு­டங்கள் இரு மாதங்­க­ளுக்கும் சற்று கூடு­த­லான காலம் கடந்­தி­ருக்கும் நிலையில், அவற்­றுக்­கி­டை­யி­லான ‘சக­வாழ்வு’ தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தின் பத­விக்­காலம் முடி­வ­டையும் வரை நீடிக்­குமா என்ற கேள்வி அர­சியல் அரங்கில் எழுந்­தி­ருக்­கி­றது. அடுத்த வருட ஆரம்­பத்தில் நடை­பெ­ற­வி­ருக்கும் உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­வ­தற்­கான தந்­தி­ரோ­பாயம் குறித்து நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் உள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான பிரிவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான பிரி­விடம் முன்­வைத்­தி­ருக்கும் ஒரு முக்­கி­ய­மான நிபந்­த­னையே அதற்குக் கார­ண­மாகும். ஜனா­தி­பதி தலை­மை­யி­லான பிரிவு ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­ட­னான கூட்டு அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யே­றினால் மாத்­தி­ரமே இருப்­பி­ரி­வு­களும் சேர்ந்து தேர்­தலில் செயற்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு தோன்ற முடியும் என்று ராஜபக் ஷ பிரிவு வலி­யு­றுத்­தி­ய­தா­கவும் உட­ன­டி­யாக அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேற முடி­யாது. பிறகு ஒரு கட்­டத்தில் அவ்­வாறு செய்­ய­மு­டியும் என்று ஜனா­தி­பதி பிரிவு கூறி­விட்­ட­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

முன்னாள் ஜனா­தி­பதி மீண்டும் ஆட்­சி­ய­தி­கா­ரத்­துக்கு வரு­வதைத் தடுக்க வேண்­டு­மானால் தங்­க­ளுக்­கி­டை­யி­லான ஐக்­கியம் தொட­ரு­வது அவ­சியம் என்ற புரிந்­து­ணர்­வுடன் ஜனா­தி­பதி சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இக்­கா­ல­வ­ரையில் செயற்­பட்டு வந்­தி­ருக்­கின்­ற­போ­திலும், அவர்கள் இரு­வ­ரி­னதும் தலை­மை­யி­லான கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான உற­வுகள் சுமு­க­மா­ன­வை­யாக இருக்­க­வில்லை என்­பதே உண்­மை­யாகும். பொரு­ளா­தார அபி­வி­ருத்தி திட்­டங்கள் என்­றா­லென்ன, அர­சி­ய­ல­மைப்புச் சீர்த்­தி­ருத்­தங்கள் என்­றா­லென்ன அல்­லது முக்­கி­ய­மான எந்­த­வொரு கொள்கை முன்­னெ­டுப்­பாக இருந்­தா­லென்ன இரு கட்­சி­களின் அர­சி­யல்­வா­தி­களும் முரண்­பா­டான நிலைப்­பா­டு­க­ளையும் அணு­கு­மு­றை­க­ளை­யுமே வெளிக்­காட்டி வந்­தி­ருக்­கின்­றனர்.

இரு பிர­தான அர­சியல் கட்­சி­களும் முன்­னென்­று­மில்­லாத வகையில் ஒன்று சேர்ந்து அமைத்­தி­ருக்கும் அர­சாங்கம் தேசிய இனப்­பி­ரச்­சினை உட்­பட நாடு எதிர்­நோக்­கு­கின்ற முக்­கி­ய­மான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களைக் காண்­ப­தற்­கான வழி­வ­கை­களை நேர்­ம­றை­யான ஒரு சூழ்­நி­லையில் ஆராய்­வ­தற்கு அரு­மை­யான வாய்ப்பைத் தரு­மென்று ஆரம்­பத்தில் எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், இறு­தி­யிலே அது அர­சாங்­க­மொன்றில் பங்­கா­ளி­க­ளா­கவே இருந்து கொண்டு பழைய மாதிரி கட்சி அர­சியல் மாச்­ச­ரி­யங்­களை எவ்­வாறு தொடர்ந்து முன்­னெ­டுப்­பது என்று இரு கட்­சி­க­ளி­னதும் அர­சி­யல்­வா­திகள் செய்­தி­ருக்­கக்­கூ­டிய ஒரு வினோ­த­மான பரி­சோ­த­னை­யாக போய்­விட்­டதோ என்று எண்ணத் தோன்­று­கி­றது. ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னதும் சுதந்­திரக் கட்­சி­யி­னதும் அமைச்­சர்கள் தனித்­த­னி­யாக செய்­தி­யாளர் மகா­நா­டு­களை ஏற்­பாடு செய்து ஒரு தரப்பை மறு­த­ரப்பு ஆட்­சி­முறை தொடர்­பிலும், அர­சியல் விவ­கா­ரங்கள் தொடர்­பிலும் விமர்­சனம் செய்­யாமல் ஒரு வாரம் கூட அண்­மைக்­கா­லத்தில் கடந்து சென்­ற­தில்லை. ஐக்­கிய தேசியக் கட்சி அமைச்­சர்­க­ளையும் அர­சி­யல்­வா­தி­க­ளையும் ‘பொறியில் வீழ்த்­து­வ­தற்கு’ தங்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்­கின்ற வச­தி­யான கரு­வி­யாக மத்­திய வங்கி பிணை­முறி கொள்­வ­னவு விவ­கா­ரத்தைச் சூழ்ந்­துள்ள சர்ச்­சை­களை அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்­திரக் கட்சி அமைச்­சர்கள் நோக்­கு­கி­றார்கள். அந்த விவ­கா­ரத்­தினால் ஐக்­கிய தேசியக் கட்சி அர­சி­யல்­வா­திகள் பெரும் சிக்­க­லான சூழ்­நி­லைக்குள் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பது உண்­மையே. இது இரு கட்­சி­க­ளுக்கும் இடை­யி­லான முரண்­பா­டு­களை மேலும் தீவி­ரப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பொறுத்­த­வரை, அவர் எதிர்­கட்சித் தலை­வ­ராக இருந்த பல வரு­டங்­களில் எதிர்­நோக்­கி­யதைப் போன்று அவரின் தலை­மைத்­து­வத்­துக்கு ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் சவால் எதுவும் இப்­போதும்  இல்லை. ஆனால், சுதந்­திரக் கட்­சிக்குள் ஜனா­தி­பதி சிறி­சே­னவின் தலை­மைத்­துவம் பலம் பொருந்­தி­ய­தாக இல்லை.

Ranil and maithri

2015 ஜன­வரி ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­பெற்று நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற ஒரு வார காலத்­துக்குள் சிறி­சே­ன­வினால் சுதந்­திரக் கட்­சியின் தலை­மைத்­து­வத்தை தன­தாக்கிக் கொள்ள முடிந்­த­தெ­னினும், இது­வ­ரையில் அவரால் கட்­சியை தனது முழு­மை­யான கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்டு வர­மு­டி­யாமல் இருக்­கி­றது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஒரு பிரிவு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­தா­ன­மாக சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்­த­வர்கள் தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்தில் பங்­கேற்­றி­ருக்­கின்ற அதே­வேளை, முன்னாள் ஜனா­தி­பதி ராஜபக் ஷவுக்கு விசு­வா­ச­மான இன்­னொரு பிரிவு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கூட்டு எதி­ரணி என்ற பெயரில் தனி­யாக இயங்­கு­கி­றார்கள். இந்த கூட்டு எதி­ர­ணி­யினர் அநே­க­மாக அர­சாங்­கத்தின் சகல செயற்­திட்­டங்­க­ளையும் கொள்கை முன்­னெ­டுப்­புக்­க­ளையும் கடு­மை­யாக எதிர்த்துக் கொண்டே இருக்­கி­றார்கள். ஆனால், எந்­த­வி­த­மான மாற்­று­வே­லைத்­திட்­டத்­தையோ அல்­லது உருப்­ப­டி­யான அர­சியல் நிகழ்ச்சி நிர­லையோ அவர்கள் முன்­வைப்­ப­தில்லை.

அதே­வேளை,அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற சுதந்­திரக் கட்சி அர­சி­யல்­வா­திகள், ராஜபக் ஷ மீதான தங்கள் நாட்­டத்தை வெளிக்­காட்­டு­வ­தற்கு தயங்­கு­வ­தா­கவும் இல்லை. எதிர்­கா­லத்தில் நடை­பெ­றக்­கூ­டிய எந்­த­வொரு தேர்­த­லிலும் முன்னாள் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான பிரி­வி­ன­ருடன் சேர்ந்து போட்­டி­யிட்டால் மாத்­தி­ரமே தங்­களால் வெற்றி பெறக்­கூ­டி­ய­தாக இருக்கும் என்று இவர்­களில் பலரும் நம்­பு­கி­றார்கள். 2015 ஆகஸ்ட் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பிர­சா­ரங்கள் ராஜபக் ஷ தலை­மை­யி­லேயே முன்­னெ­டுக்­கப்­பட்­டன. சுதந்­திரக் கட்­சி­யி­னதும் அதன் தலை­மை­யி­லான சுதந்­திர முன்­ன­ணி­யி­னதும் உத்­தி­யோக பூர்­வ­மான தலை­வ­ராக ஜனா­தி­பதி சிறி­சே­னவே இருந்­த­போ­திலும் , அவரால் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எதை­யுமே செய்­யக்­கூ­டி­ய­தாக இருக்­க­வில்லை. அன்று அவர் எதையும் செய்ய முடி­யாத பார்­வை­யா­ள­ரா­கவே இருக்­க­வேண்­டி­யேற்­பட்­டது. ஆனால், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை ஆச­னங்கள் கிடைத்­த­தாலும் கூட ராஜபக் ஷவை பிர­த­ம­ராக ஒரு­போதும் நிய­மிக்­கப்­போ­வ­தில்­லை­யென்று பயம் காட்­டு­வ­தற்கு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பத­வியை பயன்­ப­டுத்த மாத்­திரம் அவரால் முடிந்­தது. இலங்­கையில் இது கால­வரை நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­வர்­களில் எவ­ருமே சிறி­சே­னவைப் போன்று தங்கள் கட்­சி­யி­னா­லேயே ஒரு தேர்­தலின் போது ஓரங்­கட்­டப்­பட்­ட­தில்லை.

இத­னி­டையே ராஜபக் ஷ விசு­வா­சிகள் ஏற்­க­னவே முன்னாள் வெளி­யு­றவு அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தலை­மையில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன என்ற புதிய கட்­சியை ஆரம்­பித்­து­விட்­டார்கள். அதன் நோக்கம் சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மைத்­துவம் ராஜபக் ஷ விசு­வா­சி­க­ளுக்கு எதிர்­காலத் தேர்­தல்­களில் வேட்­பாளர் நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்கு மறுப்புத் தெரி­விக்கக் கூடிய பட்­சத்தில் அவர்­களின் அர­சி­ய­லுக்கு  பாதிப்பு ஏற்­ப­டா­தி­ருப்­பதை உறுதி செய்­வ­தே­யாகும். அதா­வது நிய­மனம் மறுக்­கப்­ப­டு­மானால் அவர்கள் புதிய கட்­சியின் சார்­பி­லான வேட்­பா­ளர்­க­ளாக தேர்­தலில் குதிப்­பார்கள். சில உள்­ளூ­ராட்சி சபை­களில் போட்­டி­யி­டு­வ­தற்­காக பொது­ஜன பெர­மு­ன­வினர் கடந்த வாரம் ஏற்­க­னவே கட்­டுப்­ப­ணத்தை செலுத்­தி­விட்­ட­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

ராஜபக் ஷ மீண்டும் சுதந்­திரக் கட்­சியின் தலை­மைத்­து­வத்தை கைப்­பற்­று­வ­தற்கு தன்னால் இயன்­ற­வரை முயற்­சிப்பார். அவரை மீண்டும் தலை­வ­ராக்­கு­மாறு ஜனா­தி­பதி சிறி­சேன பிரி­வி­ன­ரிடம் ஏற்­க­னவே அவரின் விசு­வா­சிகள் கோரிக்கை முன்­வைத்­தி­ருக்­கி­றார்கள். அது சாத்­தி­ய­மில்­லாது போனால் புதிய கட்­சியின் மூல­மாக தனது எதிர்­கால அர­சி­யலை அவர் முன்­னெ­டுப்பார் என்­பதில் சந்­தே­க­மில்லை. சிங்­கள மக்கள் மத்­தியில் பெரும் ஆத­ரவைக் கொண்ட அர­சியல் தலை­வ­ராக அவர் தன்­னையே நம்­பு­கிறார். கூட்டு எதி­ர­ணி­யி­னரைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் ஆக்­ரோ­ஷ­மான முறையில் அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். சுதந்­திரக் கட்­சியின் சிறி­சேன பிரி­வுடன் சேர்ந்து கொள்­வ­தற்கு அவர்கள் கடு­மை­யான பல நிபந்­த­னை­களை முன்­வைக்­கி­றார்கள். அந்த அள­வுக்கு தங்­களை பல­முள்ள பிரி­வி­ன­ராக அவர்கள் காட்டிக் கொள்­கி­றார்கள். ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் சேர்ந்து அமைத்­தி­ருக்கும் தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­று­மாறு சிறி­சேன பிரி­வி­ன­ரிடம் அவர்கள் நிபந்­தனை முன்­வைக்­கி­றார்கள். அர­சியல் ரீதியில் நோக்­கு­கையில் ஜனா­தி­பதி தரப்பு பல­வீ­ன­மா­ன­தா­கவே இருக்­கி­றது. சகல முக்­கி­ய­மான விவ­கா­ரங்­க­ளிலும் அவர்கள் கூட்டு எதி­ர­ணியின் நிலைப்­பா­டு­களை அடி­யொற்­றியே அணு­கு­மு­றை­களை வகுக்­கி­றார்கள். அதன் விளை­வாக இன்று அர­சாங்கம் எதிர்­நோக்­கு­கின்ற பல பிரச்­சி­னை­க­ளுக்கு தனது கட்­சியை முழு­மை­யாக கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்டு வரு­வதில் ஜனா­தி­ப­திக்கு இருக்கும் இய­லா­மை முக்­கி­ய­மான ஒரு கார­ண­மாக விளங்­கு­கின்­றது.

இத்­த­கை­ய­தொரு பின்­பு­லத்­திலே, 2015 ஆகஸ்ட் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்குப் பிறகு ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் சுதந்­திர கட்­சிக்கும் இடையே கைச்­சாத்­தி­டப்­பட்ட புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையின் எதிர்­காலம் என்­ன­வாகும் என்ற கேள்­வி­யெ­ழு­கி­றது. அந்த உடன்­ப­டிக்கை இரு­வ­ரு­டங்­க­ளுக்­கா­னது. அதை நீடிக்க வேண்­டுமா இல்­லையா என்­பது தொடர்பில் டிசம்பர் 31 ஆம் திக­திக்கு முன்னர் தீர்­மா­ன­மொன்றை எடுக்­கப்­போ­வ­தாக ஜனா­தி­பதி சிறி­சேன ஏற்­க­னவே கூறி­யி­ருக்­கிறார். பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பொறுத்­த­வரை, பல விவ­கா­ரங்­களில் முரண்­பா­டுகள் நில­வு­கின்ற போதிலும் கூட, இரு கட்­சி­க­ளுக்கும் இடை­யி­லான ‘சக­வாழ்வு’ தொட­ர­வேண்­டு­மென்ற விருப்­பத்தை அவர் தொடர்ச்­சி­யாக வெளிக்­காட்டி வரு­கிறார்.

SLFP and UNP

ஐக்­கிய தேசிய கட்­சியின் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னரின் அணுகு முறை­க­ளையும் செயற்­பா­டு­க­ளையும் அடிக்­கடி கண்­டன விமர்­சனம் செய்­கின்ற அதே­வேளை, பிர­தமர் ஒரு போதுமே பகி­ரங்­க­மாக அத்­த­கைய விமர்­ச­னங்­களை முன் வைப்­ப­தில்லை. ஆட்சி முறை தொடர்­பி­லான விவ­கா­ரங்­களில் ஜனா­தி­பதி சிறி­சே­ன­வுடன் நடை­முறைச் சாத்­தி­ய­மான விதத்தில் புரிந்­து­ணர்­வொன்றைப் பேணு­வதில் அக்­கறை கொண்ட ஒரு­வ­ராக பிர­தமர் எப்­போ­துமே தன்னைக் காண்­பித்து வரு­கிறார். ஆனாலும், பிள­வு­பட்­டி­ருக்­கக்­கூ­டிய சுதந்­தி­ரக்­கட்சி ஐக்­கிய தேசியக் கட்­சியின் எதிர்­காலத் தேர்தல் வெற்றி வாய்ப்­பு­க­ளுக்கு அனு­கூ­ல­மா­ன­தாக இருக்கும் என்று அவர் நம்­பு­கிறார் என்­பது வெளிப்­ப­டை­யா­னது. சுதந்­தி­ரக்­கட்­சியில் தற்­போ­துள்ள பிளவைப் பொறுத்­த­வரை, முன்னாள் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான பிரிவு வெ ளித் தோற்­றத்தில்  இன்று  காணப்­ப­டு­வதைப் போன்று  மக்கள் மத்­தியில் உண்­மையில் பெரும் செல்­வாக்கைக் கொண்­டி­ருக்­கி­றதா? ஜனா­தி­பதி சிறி­சே­னவின் பிரிவு கணக்கில் எடுக்­கக்­கூ­டிய வாக்கு வங்­கி­யொன்றைக் கொண்­டி­ருக்­கி­றதா என்­பதை உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள் நிச்­ச­ய­மாக வெளிக்­காட்டும்.

சுதந்­தி­ரக்­கட்சி பிள­வு­பட்­டி­ருக்கும் நிலையில் தேர்­தல்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் சுல­ப­மாக வெற்றி பெறக் கூடி­ய­தாக இருக்­கு­மென்று பிர­தமர் நம்­பு­கிறார் என்றால், அந்த நம்­பிக்கை எந்­த­ள­வுக்கு விவே­க­மா­னது என்ற கேள்­வியும் எழு­கி­றது. ஏனென்றால் கடந்த மூன்று வரு­ட­கா­லத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யையும் உள்­ள­டக்­கிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே மக்கள் தங்கள் முடி­வு­களை எதிர்­காலத் தேர்­தல்­களில் எடுப்­பார்கள். அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் மக்கள் மத்­தியில் கணி­ச­மான வெறுப்­பு­ணர்வைத் தோற்­று­வித்­தி­ருக்­கின்­றன என்­பதில் சந்­தே­க­மில்லை. அதனால், பத­வியில் இருக்­கின்ற அர­சாங்­கத்தின் மீதான மக்­களின் உணர்வுப் பிர­தி­ப­லிப்­புகள் வாக்­கு­க­ளாக மாறும் போது ஐக்­கிய தேசியக் கட்­சியும் அதனால் பாதிக்­கப்­ப­டாமல் இருக்க வாய்ப்­பில்­லையே!

கடந்த வாரம் குரு­நாகல் மாவட்­டத்தில் நிக்­க­வா­ரட்­டி­யவில் பொதுக் கூட்­ட­மொன்றில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி சிறி­சேன ஊழல் மோச­டி­களைத் தடுப்­ப­தற்­காக தன்னால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற உறு­தி­யான முடி­வு­களைக் கண்­டனம் செய்­ப­வர்கள் என்று அவர் கரு­து­கின்­ற­வர்­களை கடு­மை­யாகக் குற்­றஞ்­சாட்­டினார். அவ­ரது குற்­றச்­சாட்டு ஐக்­கிய தேசி­யக்­கட்சி அர­சி­யல்­வா­திகள் சிலரை நோக்­கி­யது என்­பது வெளிப்­ப­டை­யா­னது. 2015 தேர்­தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதற்கு அக்கட்சியின் அரசாங்கம் இழைத்த பல தவறுகளே காரணம். அதுபோன்றே ஐக்கியதேசியக் கட்சியும் அரசாங்கத்தில் இருக்கும்போது தவறுகளைச் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் தனதுரையில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் இந்த உரை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் வாதிகளிடமிருந்து இதுவரையில் எத்தகைய எதிர்வினையும்  வரவில்லை

ஜனாதிபதியைக் கண்டனஞ்செய்து கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விக்கிரமசிங்க அறிவுறுத்தியதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன. மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுவது என்பது சுலபமானதல்ல. அவ்வப்போது பிரச்சினைகள் எழவே செய்யும் என்றும் பிரதமர் அவர்களிடம் கூறியிருக்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ அரசியல் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு செய்தியாளர் மகாநாடுகளை ஏற்பாடு செய்வதற்கு முன்னதாக கட்சியின் தலைமைத்துவத்திடம் முன்அனுமதியைப் பெறவேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியிருக்கிறார். அரசாங்கத்தின் இரு பிரதான பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வதை தவிர்ப்பதில் பிரதமர் அக்கறை காட்டுகிறார் என்று இதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

ஜனாதிபதியினதும் பிரதமரினதும் கட்சிகளுக்கிடையிலான சஞ்சலமான சகவாழ்வு உள்ளுக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்ற பிரச்சினைகளிலிருந்து தப்பித்து எவ்வளவு காலத்துக்கு  நின்று பிடிக்க முடியும்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *