Search
Thursday 24 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனரஞ்சக அரசியலும் எம்ஜியாரும்

ஜனரஞ்சக அரசியலும் எம்ஜியாரும்

வீரகத்தி தனபாலசிங்கம் 

தமி­ழ­கத்தின் முன்னாள் முத­ல­மைச்சர் காலஞ்­சென்ற எம்.ஜி. இரா­மச்­சந்­தி­ரனின் 100 ஆவது பிறந்த தினம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (ஜன­வரி 17) அனுஷ்­டிக்­கப்­பட்­டது. அவரின் பிறப்பு நூற்­றாண்டை முன்­னிட்டு இவ்­வ­ருடம் பூராவும் தமி­ழ­கத்தில் பெரு­மெ­டுப்பில் நிகழ்­வு­களை நடத்­து­வ­தற்கு அனைத்­திந்­திய அண்ணா திரா­விட முன்­னேற்றக் கழ­கமும் அதன் தலை­மை­யி­லான மாநி­ல­அ­ர­சாங்­கமும் ஏற்­பா­டு­களைச் செய்­தி­ருக்­கின்­றன.எம்.ஜி.ஆருக்கு பிறகு தலைமைப் பொறுப்­பை­யேற்று கழ­கத்தை வழி­ந­டத்­திய முன்னாள் முத­ல­மைச்சர் செல்வி ஜெய­ல­லிதா உயி­ருடன் இருந்­தி­ருந்தால் மிகவும் பிர­மாண்­ட­மான முறையில் நூற்­றாண்டு தினத்தை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­தி­ருப்பார் என்­பதில் சந்­தே­க­மில்லை. தனக்கு எல்­லா­மு­மாக விளங்­கிய எம்.ஜி.ஆரின் நூற்­றாண்டை எவ்­வா­றெல்லாம் கொண்­டாட வேண்­டு­மென்று அவர் கனவு கண்­டி­ருப்­பாரோ? ஜெய­ல­லி­தாவின் மறை­வுக்குப் பிறகு கடந்த மாதம் அண்ணா தி.மு.க.வின் பொதுச் செய­லா­ள­ராக பொறுப்­பேற்றுக் கொண்ட அவரின் ஆருயிர்த் தோழி சசி­கலா நட­ராஜன் கழ­கத்தில் தனது தலை­மைத்­து­வத்தை வலுப்­ப­டுத்தி தொண்­டர்­களின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான வாய்ப்­பாக எம்.ஜி.ஆர் நூற்­றாண்டை பயன்­ப­டுத்­து­வதில் நாட்டம் கொண்­டி­ருப்­பதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கி­றது.

திரா­விட முன்­னேற்றக் கழ­கத்தின் ஸ்தாபக தலை­வரும் முன்னாள் முத­ல­மைச்­ச­ரு­மான அறிஞர்.சி.என். அண்­ணாத்­து­ரையின் பிறப்பு நூற்­றாண்டு கொண்­டா­டப்­பட்டு 9 வரு­டங்­க­ளுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் நூற்­றாண்டு வந்­தி­ருக்­கி­றது. சென்­னையைச் சேர்ந்த ஓய்­வு­பெற்ற சிவில் சேவை அதி­கா­ரி­யான ஆர்.அண்ணன் திரா­விட இயக்கத் தலை­வர்­களைப் பற்றி விரி­வாக எழுதி வரு­பவர். அண்­ணாவின் சுய­ச­ரி­தை­யையும் அவர் ஏற்­க­னவே வெளி­யிட்­டி­ருந்தார். அண்ணா நூற்­றாண்டை முன்­னிட்டு ‘இந்து’ ஆங்­கிலப் பத்­தி­ரி­கையில் 2008 செப்­டெம்பர் 15 ஆம் திகதி ‘அண்ணா; அதி­வி­ஷே­ட­மான பொது­மகன்’ (Anna; Commoner Extraordinary)  என்ற தலைப்பில் எழு­திய அவர் எம்.ஜி.ஆர். நூற்­றாண்­டை­யொட்டி கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அதே பத்­தி­ரி­கையில் ‘ஜன­ரஞ்­ச­க­வாத அர­சி­யலின் இள­வ­ரசன்’ (The Prince of Populism) என்ற தலைப்பில் எழு­தி­யி­ருந்தார். இன்­றைய தினம் எம்.ஜி.ஆரைப்­பற்றி எழு­து­வ­தற்கு இக்­கட்­டு­ரை­யா­ளரைத் தூண்­டி­யது கண்­ணனின் கட்­டு­ரையின் தலைப்பின் ஈர்ப்­பே­யாகும்.

MGR

 Populism என்ற பதம் இன்று உல­க­ளா­விய ரீதியில் அர­சி­யலில் பர­வ­லாக பேசப்­ப­டு­கின்ற ஒன்­றாகும். இதை தமி­ழில்­எ­ழு­து­கி­ற­வர்கள் மக்கள் கவர்ச்சி அர­சியல் என்றும் ஜன­வ­சிய அர­சியல் அல்­லது ஜன­ரஞ்­சக அர­சியல் என்றும் மொழி­பெ­யர்க்­கி­றார்கள். ஜன­ரஞ்­சக அர­சியல் என்­பது சாதா­ரண மக்­களின் அபிப்­பி­ரா­யங்­க­ளையும் விருப்­பங்­க­ளையும் பிர­தி­நி­திப்­ப­டுத்­து­வ­தாகக் கூறப்­ப­டு­கிற ஒரு அர­சியல் என்றும் சாதா­ரண மக்கள் அல்­லது வெகு­ஜ­னங்கள் விரும்­பு­கின்­ற­வற்றை அவர்­க­ளுக்கு கொடுப்­பதன் மூல­மாக அவர்­களின் ஆத­ரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற அர­சியல் சிந்­த­னை­களும் செயற்­பா­டு­களும் என்றும் அர்த்தம் கற்­பிக்­கப்­ப­டு­கி­றது. அதா­வது சாதா­ரண மக்கள் மத்­தியில் ஆத­ரவைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக அவர்­களின் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு இசை­வான முறையில் கொள்கை அணு­கு­மு­றை­களை வகுத்து செயற்­ப­டு­கின்ற அர­சி­யல்­வா­தி­களை ஜன­ரஞ்­சக அர­சி­யல்­வா­திகள் (Populists) எனலாம். சாதா­ரண மக்­களின் விருப்பு வெறுப்­புக்­களில் இருக்கக் கூடிய சரி, பிழை­களைச் சீர்த்­தூக்கிப் பார்க்­காமல் வெறு­மனே அவர்­களின் ஆத­ரவைத் தம்­பக்கம் வைத்துக் கொள்­வதை மாத்­திரம் நோக்­க­மாகக் கொண்டு செயற்­ப­டு­கின்ற அர­சி­யல்­வா­தி­க­ளையும் அந்த வகை­ய­றா­வி­லேயே சேர்க்க வேண்டும்.

30 வரு­டங்­க­ளுக்கு முன்னர் மறைந்த எம்.ஜி.ஆர். பல தலை­மு­றை­களின் ஊடாக மக்­களைக் கவர்ந்­த­வ­ராக விளங்கி வந்­தி­ருக்­கிறார். எம்.ஜி.ஆர் சினி­மாவின் மூல­மாக மக்­களின் மத்­தியில் தன்னைப் பற்றிக் கட்­டி­யெ­ழுப்­பிய பிம்பம், தமி­ழ­கத்தின் முத­ல­மைச்­ச­ரான பிறகு சமு­தா­யத்தின் வறிய மற்றும் பின்­தங்­கிய பிரிவு மக்­களின் நலன்­க­ளுக்­காக முன்­னெ­டுத்த நலன்­பு­ரித்­திட்­டங்கள் ஆகி­யவை கார­ண­மா­கவே ஒரு ஜன­ரஞ்­ச­க­வா­தி­யாக மாறினார். மறைந்து மூன்று தசாப்­தங்­களின் பின்­னரும் கூட தமி­ழ­கத்தில் அவ­ருக்­கென்று ஒரு  வாக்­கு­வங்கி இருக்­கி­றது. அவரின் பெய­ரைச்­சொல்லி வாக்குக் கேட்­பதை தவிர்க்க முடி­யாமல் இருக்­கி­றது. உயி­ருடன் இருந்த போது அவரை எதிர்த்­த­வர்­களும் அவர் மறைந்த பிறகு அந்த எதிர்ப்பைக் கைவிட்­டு­விட்­டார்கள். அவரைப் பற்றி எதிர்­ம­றை­யாகப் பேசு­வதைத் தவிர்க்­கி­றார்கள். இந்­தி­யாவில் சினி­மாத்­து­றையில் இருந்து அர­சி­ய­லுக்கு பலர் வந்­தி­ருக்­கி­றார்கள் என்­றாலும், எம்.ஜி.ஆரைப் போன்று இறந்த பின்­ன­ரும்­கூட நிலை­பே­றான செல்­வாக்­கையும் மக்கள் ஆத­ர­வையும் கொண்­ட­வர்கள் என்று வேறு யாரையும் அடை­யாளம் காண முடி­ய­வில்லை. இன்றும் சினி­மாவில் இருப்­ப­வர்கள் அர­சி­யலில் ஈடு­ப­டு­வது குறித்து ஆர்வம் காட்­டு­கின்ற போக்கு எம்.ஜி.ஆர் அர­சி­யலில் கண்ட வெற்­றி­யாலும்  மக்­க­ளினால் மறக்­கப்­பட முடி­யா­த­வ­ராக இருப்­ப­த­னாலும் ஏற்­ப­டு­கின்ற தாக்­க­மே­யாகும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

mgr

திரைப்­ப­டங்­களில் எம்.ஜி.ஆர் தாங்­கிய வேடங்­க­ளுக்கும் நிஜ­வாழ்க்­கையில் அவரின் நடத்­தை­க­ளுக்­கு­மி­டையில் வேறு­பாட்டை உண­ர­மு­டி­யாத ஒரு­வ­கை­யான மருட்­சியை அவர் தனது ரசி­கர்கள், ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தார். திரைப்­ப­டங்­களில் அநீ­திக்கு எதி­ரான போரா­ளி­யாக அவரைப் பார்த்த ரசி­கர்கள் அர­சி­ய­லிலும் அவ்­வாறே அவரை நோக்­கி­னார்கள். கடந்த மாதம் ஜெய­ல­லிதா மர­ண­ம­டைந்த பிறகு தமி­ழ­கத்தின் பல தொலைக்­காட்சி அலை­வ­ரி­சைகள் மறைவுச் செய்­திக்குக் கொடுத்­த­தை­யொத்த முக்­கி­யத்­து­வத்­துடன் எம்.ஜி.ஆரும் ஜெய­ல­லி­தாவும் நடித்த திரைப்­ப­டங்­களின் காதல் பாடல்காட்சி­களை ஒளி­ப­ரப்பத் தொடங்­கின. சில தொலைக்­காட்­சி­களில் அது  பல வாரங்­க­ளாகத் நீடித்­ததைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. அது நிழ­லுக்கும் நிஜத்­துக்கும்  இடையில் வேறு­பாட்டைக் காண­மு­டி­யாத அள­வுக்கு கட்­டுண்டு கிடக்கும் ஆத­ர­வா­ளர்­களைத் திருப்­திப்­ப­டுத்­து­கின்ற ஒரு  பிர­யத்­த­ன­மா­கவே தோன்­றி­யது. ஜெய­ல­லி­தாவும் கூட எம்.ஜி.ஆருடன் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டதன் கார­ண­மா­கவே பெரும் மக்கள் ஆத­ர­வை­கொண்ட தலை­வி­யாக விளங்க முடிந்­தது. ஜெய­ல­லி­தாவை மக்கள் நேர­டி­யாகச் சந்­திப்­பது இய­லாத காரியம். ஆனால் அவர் மக்கள் செல்­வாக்­கு­டைய தலை­வி­யாக இருந்தார். அவ­ரிடம் எதேச்­சா­தி­கா­ரத்­தனம் இருந்­தது என்­றாலும் ஜன­ரஞ்­ச­க­மான அர­சி­யல்­வா­தி­யாக அவரால் இருக்க  முடிந்­தது. சினிமா இன்று தென்­னிந்­திய அர­சி­ய­லிலும் சமூக வாழ்வின் சகல துறை­க­ளிலும் செலுத்­து­கின்ற எதிர்­ம­றை­யான ஆதிக்­கத்தைப் பற்­றிய பல விமர்­ச­னங்கள் இருக்­கின்­றன. அதை இங்கு ஆராய்­வது சாத்­தி­ய­மா­ன­தல்ல.

MGR and kamaraj

ஈ.வெ.ரா. பெரி­யாரின்  தலை­மை­யி­லான திரா­விடர் கழ­கத்தில் இருந்து 1949ஆம் ஆண்டு பிரிந்து சென்ற அண்ணா தனது தலை­மையில் திரா­விட முன்­னேற்றக் கழ­கத்தைத் தொடங்கி 18 வரு­டங்­களின் பின்னர் 1967ஆம் ஆண்டில் தமி­ழ­கத்தில் ஆட்­சியைப் பிடித்தார். மக்­களின் கவ­னத்தை ஈர்க்கும் மேடைப் பேச்­சையும் எழுத்­தாற்­ற­லையும் கவர்ந்­தி­ழுக்கும் சினி­மா­வையும் ஆயு­தங்­க­ளாகக் கொண்டே அண்­ணாவும் அவ­ரது தம்­பி­மாரும் காங்­கிரஸ் என்ற மாபெரும் அர­சியல் இயக்­கத்தை தமி­ழ­கத்தில் வீழ்த்­தி­னார்கள். சினி­மாவில் திரா­விட இயக்கம் சிவா­ஜி­க­ணே­ச­னை­ஆ­ரம்­பத்தில் பயன்­ப­டுத்­தி­யி­ருந்த போதிலும், காங்­கி­ரஸில் இருந்து திரா­விட இயக்­கத்­திற்கு வந்த எம்.ஜி. ஆர். அவரை ஓரங்­கட்­டு­வ­தற்கு நீண்ட நாள் எடுக்­க­வில்லை. அதற்குப் பிறகு தி.மு.க.வில் எம்.ஜி. ஆரின் வளர்ச்­சியை எவ­ராலும் தடுக்க முடி­ய­வில்லை. சினிமா ரசி­கர்­களின் ஆத­ரவே இதற்கு பிர­தான தள­மாக அமைந்­தது. பாம­ரர்­க­ளுடன் படித்­த­வர்­களும் பின்னால் சென்­றார்கள். அர­சியல் கூட்­டங்­களில் இடை நடுவில் எம்.ஜி. ஆர். வரு­கை­தந்த சந்­தர்ப்­பங்­களில் மக்கள் அவரைப் பார்ப்­பதில் ஆர்­வத்தைக் காட்­டி­ய­தனால் அண்­ணாவே தனது உரையை சிறி­து­நேரம் நிறுத்தி வைக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் பல தட­வைகள் ஏற்­பட்­டி­ருந்­தது. பாக­னுக்கு பணிந்து நடக்­கிற யானை­யாக எம்.ஜி.ஆரை அண்ணா கரு­தி­னாலும் அந்த யானையின் பலத்தை அறிந்­த­வ­ரா­கவே நடந்­து­கொண்டார் என்று கண்ணன் எழு­தி­யி­ருக்­கிறார்.

MGR with Rajaji

1967 பெப்­ர­வ­ரியில் தமிழ்­நாடு சட்ட சபைத் தேர்­தல்கள் நடை­பெ­ற­வி­ருந்த நிலையில் ஜன­வ­ரியில் எம். ஆர். ராதாவின் துப்­பாக்கிச் சூட்டில் எம்.ஜி.ஆர். படு­கா­ய­ம­டைந்தார்.

ஆஸ்­பத்­தி­ரியில் சிகிச்சை பெற்ற நிலை­யி­லேயே அவர் அத்­தேர்­தலை எதிர்­கொண்டார். ஆஸ்­பத்­திரி கட்­டிலில் எம்.ஜி.ஆர். இருக்கும் படங்­களைக் கொண்ட சுவ­ரொட்­டிகள் அந்தத் தேர்­தலில் தி.மு.க.வின் வெற்­றிக்கு பெரும் பங்­க­ளிப்பைச் செய்­தன. இரு வரு­டங்கள் மாத்­தி­ரமே முத­ல­மைச்­ச­ராக இருந்த அண்ணா 1969 பெப்­ர­வ­ரியில் இறந்த பிறகு முத­ல­மைச்­ச­ராக கரு­ணா­நிதி வரு­வ­தற்கு எம்.ஜி.ஆர் உத­வினார் என்ற போதிலும், இரு­வரும் நீண்­ட­காலம் ஒன்­றாக இருக்­க­மு­டி­ய­வில்லை.

கணக்குக் கேட்ட கார­ணத்­திற்­காக தி.மு.க.வில் இருந்­து­வெ­ளி­யேற்­றப்­பட்ட எம்.ஜி.ஆர் 1972 அக்­டோ­பரில் அண்ணா தி.மு.க. வை தொடங்­கினார். ஐந்து வரு­டங்­களில் அவர் தமி­ழ­கத்தின் ஆட்­சி­யைப்­பி­டித்து முத­ல­மைச்­ச­ரானார். அவர் இறக்கும் வரை தி.மு.க. தலைவர் கரு­ணா­நி­தி­யினால் ஆட்­சிக்கு வர முடி­ய­வில்லை.  இது எல்­லோ­ருக்கும் தெரிந்த வர­லா­றுதான். என்­றாலும் எம்.ஜி. ஆர். ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்­ன­தாக இந்­தி­யாவில் நில­விய பிரத்­தி­யே­க­மான ஒரு அர­சியல் சூழ்­நிலை அவ­ருக்கு தமி­ழக மக்கள் மத்­தியில் இருந்த செல்­வாக்கின் விசித்­தி­ர­மான இயல்பை வெளிக்­காட்­டு­வ­தாக அமைந்­தி­ருந்­தது.

MGR with Periyar

பிர­தமர் இந்­திரா காந்­தியின் ஆட்­சிக்­கா­லத்தில் 1975 ஜுன் 25ஆம் திகதி  பிர­க­டனம் செய்­யப்­பட்ட  அவ­ச­ர­கா­ல­நிலை சுமார் இரு வரு­டங்கள் நீடித்து 1977 மார்ச் 21ஆம் திக­தியே நீக்­கப்­பட்­டது. அவ­ச­ர­கால நிலையின் கீழ் பிர­த­ம­ருக்கு இருந்த அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்தி இந்­தி­ரா­காந்தி தேர்­தல்­களை இடை நிறுத்தம் செய்தார். ஜன­நா­யக மற்றும் குடி­யியல்  சுதந்­தி­ரங்கள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன. அவரின் அர­சியல் எதி­ரிகள் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டனர். பத்­தி­ரி­கைகள் தணிக்கை செய்­யப்­பட்­டன. சஞ்சய் காந்­தி­யினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட கட்­டாய கருத்­தடைத் திட்டம் உட்­பட பெரு­ம­ளவு மனித உரிமை மீறல்கள்  இடம்­பெற்­றன. இ­டையில் தமி­ழ­கத்தில் கரு­ணா­நி­தியின் ஆட்சி கலைக்­கப்­பட்டு ஆளுநர் ஆட்சி பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. சுதந்­திர இந்­தி­யாவின் வர­லாற்றில் மிகவும் சர்ச்­சைக்­கு­ரி­ய­தொரு கால­கட்­ட­மாக அவ­ச­ர­கால நிலை விளங்­கி­யது. இந்­திரா காந்தி இந்­திய மக்­களால் வெறுக்­கப்­பட்டார். 1977 மார்ச்சில் இடம்­பெற்ற பொதுத்­தேர்­தலில் உத்­தரப் பிர­தே­சத்தில் தனது சொந்தத் தொகு­தி­யி­லேயே அவரால் வெற்றி பெற முடி­ய­வில்லை. நாடு­பூ­ராவும் மாபெரும் காங்­கிரஸ் எதிர்ப்பு அலை வீசி­யது.

 ஆனால், அந்தத் தேர்­தலில் எம்.ஜி.ஆரின் அண்ணா தி.மு.க., இந்­திரா காந்­தியின் காங்­கிரஸ் கட்­சி­யு­ட­னேயே கூட்­டணி சேர்ந்து தமி­ழ­கத்தில் போட்­டி­யிட்­டது.  மாநி­லத்தின் 39 லோக் சபா தொகு­தி­களில் 34 தொகு­தி­களில் அந்தக் கூட்­டணி வெற்றி பெற்­றது. அண்ணா தி.மு.க. 17 தொகு­தி­களைக் கைப்­பற்­றி­யது. அதுவே அக்­கட்சி முதன் முத­லாக சந்­தித்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லாகும். காங்­கிரஸ் கட்சி படு­தோல்­வி­ய­டைந்த நிலையில் ஜனதா கட்சி மத்­தியில் ஆட்­சிக்கு வந்­தது. முதற்­த­ட­வை­யாக மத்­தியில் காங்­கிரஸ் அல்­லாத கட்­சியின் அர­சாங்கம்.

MGR with Indira Gandhi

இந்­திரா காந்­தியின் கொடுங்­கோன்­மைக்கு எதி­ராக முழு இந்­தி­யா­வுமே திரண்­ட­போது தமி­ழ­கத்தில் மாத்­திரம் எம்.ஜி.ஆருடன் கூட்­டணி சேர்ந்த கார­ணத்தால் காங்­கி­ர­ஸையும் மக்கள் ஆத­ரித்து வாக்­க­ளித்­தார்கள். அவசரகால நிலைக் கொடுமைக்கு எதிராக பேசிய கருணாநிதியை மக்கள் பொருட்படுத்தவில்லை. மாநிலத்தில் கருணாநிதி எதிர்ப்பு  அலை தான் வீசியதே தவிர, இந்திரா எதிர்ப்பு அலை அல்ல.  அதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம். ஜனரஞ்சகமான ஒரு அரசியல் தலைவரின் எதிர்மறையான பரிமாணத்தை இங்கு பார்க்க முடிகிறதல்லவா? அத்தகைய ஜனரஞ்சகவாத  அரசியல் ஜனநாயக விரோத செயற்பாடுகளிலிருந்து  மக்களின் கவனத்தைத் திருப்புகின்ற போக்குகளுக்கு ஊக்கம் அளித்ததற்கு உலகில் பல உதாரணங்கள் உண்டு.  அதில் இதுவும் ஒன்று. இரு மாதங்கள் கழித்து  தமிழகத்தில் நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலில் காங்கிரஸுடனான  கூட்டணியை முறித்துக் கொண்டு  எம்.ஜி.ஆர். தனியாக போட்டியிட்டு ஆட்சிக்கு வந்தார்.

உடனடியாகவே அவர் ஜனதா கட்சியின் ஒரு நேச அணியாக மாறினார்.எம்.ஜி.ஆர். ஒரு போதுமே மத்திய அரசாங்கங்களைப் பகைத்துக்கொள்ளவில்லை.

அவர் எந்த பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் கழகத்தவர்கள் கேள்வி கேட்காமல் அதைப் பின்பற்றினார்கள். ஜனரஞ்சகவாத அரசியல் தனிநபர் வழிபாடாகவும் மாறியது. ஜெயலலிதாவின் காலத்தில் அது உச்சத்தைத் தொட்டது.

ஜனரஞ்சகவாத அரசியலின் ஒரு பிரத்தியேகமான பரிமாணமாக எம்.ஜி.ஆர். விளங்கினார். கண்ணன் ஜனரஞ்சகவாத அரசியலின் இளவரசர் என்றுதான் குறிப்பிட்டார்.

சினிமாப் பாணியில் சொல்வதானால் எம்.ஜி.ஆரை அத்தகைய அரசியலின் மன்னாதி மன்னன் எனலாம்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *