Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் தேசத்தின் வளைக்க முடியாத பலத்தை உடைக்கும் மைத்திரி அரசின் முயற்சி

தமிழ் தேசத்தின் வளைக்க முடியாத பலத்தை உடைக்கும் மைத்திரி அரசின் முயற்சி

தமிழ் மகன்

இதுவரை காலமும் தமிழ் தேசத்தி;ன் வளைக்கமுடியாத பலமாக இருந்து வந்த ஊடகத்துறையை உடைக்கும் முயற்சியில் இன்று சிங்கள தேசம் களம் இறங்கிஇருக்கிறது. இது வரைகாலமும் தமிழ் தேசத்தின் ஊண்றுகோலகவும்.தமிழீழ விடுதலைப்போரின் தாங்கு தூண்களாகவும் இருந்து வந்த ஊடகத்துறையை இன்றைய மைத்திரி அரசு முற்றும் முழுதாக சிதைக்கும் ஒரு பாரிய நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

2009ம் ஆண்டு தமிழீழ விடுதலை போராட்டத்தில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னரான காலப்பகுதியில் சிங்கள தேசம் தமிழர்கள் மீது ஒரு சந்தமற்ற பாரிய உளவியல் போர் ஒன்றை தொடுத்திருக்கிறது. அதில் 50 வீதத்துக்கு மேல் வெற்றியும் கண்டிருக்கிறது. ஆனால் இதுவரை காலமும் சிங்கள தேசத்தால் உடைக்கமுடியாமல் இருந்த ஒரு பகுதி தமிழ் தேசிய ஊடகப்பரப்பு. ஆனால் மகிந்த அரசால் இயலாத ஒன்றை இன்று மைத்திரி அரசு செய்து முடித்திருக்கிறது. தமிழர்களின் ஊடகப்பரப்புக்குள் சிங்கள தேசம் உள் நுளைந்திருக்கிறது. மிகவும் தெளிவான காய் நகர்த்தல்களுடன் ரணில் அரசின் நயவஞ்க போக்குடன் சிங்கள தேசம் தமிழதேசிய ஊடகப்பரப்பை சிதைக்கும் முயற்சியில் ஒரு வெற்றியையும் கண்டிருக்கின்றது.

3 (1)
இது வரை காலமும் தமிழ தேசியத்தின் மீது பற்றுதி கொண்டவர்களையும் சிங்கள தேசத்துக்கு அடிபணிய மறுத்தவர்களையும், விரும்பியோ விரும்பமலோ தம் உதவிகளைப் பெற்று தமக்கு கீழ் வரவேண்டும் என்ற ஒரு கட்டாய நிலைக்கு இன்று தள்ளியிருக்கிறது சிங்கள தேசம்.

பனையோலையும் பேனாமுனையும் இணையும் நல்லிணக்க பயணம் என்ற தலைப்பில் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு ஒருங்கமைக்கப்பட்டிருந்தது. சிங்கள தேசத்தின் ஊடக அமைச்சர் பிரதி அமைச்சர், தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் என தெற்கில் இருந்தும், யாழ் ஊடக அமையம், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் குடும்பங்கள்,போர்க்காலப்பகுதியில் ஊடகப்பணியாற்றிய ஊடகவியலாளர்கள் என வடக்கில் இருந்தும் பங்குபற்றியிருந்தனர்.

இதுவரை காலமும் தமிழ்தேசிய ஊடகவியலாளரக்களாக இருந்தவர்கள் இன்று சிங்களத்தில் ஏதோ ஒன்று பொறிக்கப்பட்ட மேலாடையை அணிந்து சிங்கள தேச ஊடகவியலாளரக்ளாக மாற்றப்பட்டார்கள் எனலாம். அதாவது மக்களுக்கு சிலவற்றை வெளிச்சமிட்டு காட்ட வேண்டிய ஊடகவியலாளர்களே இன்று என்ன வென்றே தெரியாத ஒரு வசனம் பொறிக்கப்பட்ட முற்றுமுழுதாக சிங்கள தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த மேலாடை அணந்திருந்ததமையானது தமிழ்தேசத்தின் சில ஊடகவியலாளர்களின் அரசியல் அறிவு வறுமையின் அவல நிலையை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. தாம் யாரை பிரதிநிதித்துவம் செய்கின்றோம், என்பதை மறந்து சிங்கள பேரினவாதத்தின் இயல்பை மறந்து அதன் தோளில் கைபோடவிளையும் இவர்களால் முக்கியமானதொரு தருணத்தில் தமிழ்தேசியத்தின் இருப்பு மேலும் பலவீனப்படுத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *