Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நான் எனது நாட்டிற்கு நேர்மையாக பணியாற்றுகின்றேன்- இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன்

நான் எனது நாட்டிற்கு நேர்மையாக பணியாற்றுகின்றேன்- இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன்

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து உச்சநீதிமன்றமும் ஏனைய நீதிமன்றங்களும் என்னை விடுவித்துவிட்டன என தெரிவித்துள்ள மத்தியவங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்துவரும் கோப் குழு தனக்கு நீதி வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

கேள்வி- இலங்கையின் பாராளுமன்ற விவாதங்கள், ஊடகங்கள் ,எதிர்கட்சியினர் என அனைவராலும் விவாதிக்கப்படுபவராக நீங்கள் காணப்படுகின்றீர்கள்?ஏன் இந்த நிலை?

பதில்-அது நல்லது,நான் எனது நாட்டிற்காக நேர்மையாக பணியாற்றுகின்றேன்,இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் நான் ஆற்றிவரும் தனித்துவமான பணி என்னை பற்றிய கலந்துரையாடல்களிற்கு காரணமாகயிருக்கலாம்.

கேள்வி- ஆனால் நீங்கள் ஓரு சிங்கப்பூர் பிரஜையில்லையா?

பதில்-2004 இல் நான் சிங்கப்பூரிற்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன் நான் அந்த நாட்டின் பிரஜையாக இருக்காவிட்டால் எனது வேலையை இழந்திருப்பேன்.என்னால் எதனை பெறமுடியும் என்பதை கருத்தில்கொண்டே நான் அதனை ஏற்றுக்கொண்டேன், அது பிழை என நான் கருதவில்லை.

கேள்வி-நீங்கள் எங்கு பிறந்தீர்கள்?

பதில்- சிங்கப்பூரில்

கேள்வி- பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுடன் உள்ள நட்பு காரணமாகவா நீங்கள் மத்தியவங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டீர்கள்?

பதில்-இல்லை என தகுதிகாரணமாகவே நான் நியமிக்கப்பட்டேன், இலங்கையுடன் பொருளாதாரத்துடன் தொடர்புபட்ட உயர்மட்ட அமைப்புகளை கையாண்ட அனுபவம் எனக்குள்ளது.

சிங்கப்பூரிற்கு செல்வதற்கு முன்னர் 10 வருடங்களிற்கு மேல் நான் இலங்கை மத்திய வங்கியில் பணியாற்றினேன். நான் அவ்வேளை இலங்கை நிதியமைச்சின் கீழ் பணிபுரிந்தேன், பொருளாதாரத்தில் ஓக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பட்டப்பிற்படிப்பை பூர்த்திசெய்தவன் நான். உலகின் பிரபலமான நிறுவனங்களில் முகாமைத்துவ பதவியை வகித்திருக்கின்றேன். இதன் காரணமாக இந்த பதவிக்கு அவசியமானதை விட அதிக தகுதி எனக்குள்ளது.

கேள்வி-பிரதமர் தனது தேவைகளிற்காகவே உங்களை நியமித்தார் என்ற வதந்தி குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில்-நாட்டிற்கு எனது சேவையை பெற்றுக்கொடுக்க எண்ணி அவர் என்னை நியமித்திருக்கலாம்.

கேள்வி-உங்களிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் காணப்படுகின்ற போதிலும் பிரதமர் உங்களை பாதுகாக்கின்றார் என கூட்டு எதிர்கட்சியினரும் ஜே.விபியும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தஉங்கள் கருத்து என்ன?

பதில்-எவரையும் குற்றம்சாட்டுவதற்கான உரிமையை அரசாங்கம் அனைவரிற்கும் வழங்கியுள்ளது. கோப் குழு என்மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து எனக்கு நியாயம் வழங்கும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி-ஆனால் குற்றச்சாட்டுகள் மிகவும் பாரதூரமானவையல்லவா?

பதில்-இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து உச்சநீதிமன்றமும் ஏனைய நீதிமன்றங்களும் என்னை விடுவித்துவிட்டன.

கேள்வி-திறைசேரி பிணை விவகாரம் மூலம் நீங்கள் நாட்டிற்கு 50 பில்லியன் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதா?

பதில்-இது முற்றிலும் பிழையானது இந்த நாட்டின் மக்கள் இவ்வாறான பிழையான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கேள்வி-உங்கள் மருமகனின் நிறுவனத்திற்கு ஆதாயம் கிடைக்ககூடிய விதத்தில் நடந்துகொண்டதாக உங்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதே?

பதில்-இது ஓன்றும் புதிதல்ல. மத்தியவங்கியின் பணியாளர்களின் நாளாந்த நடவடிக்கைகளில் இதுவும் ஓன்று .கேள்விப்பத்திர சபை இது குறித்த முடிவுகளை எடுக்கின்றது.அந்த முடிவுகளிற்கு அனுமதியை வழங்குவது மாத்திரமே எனது பணி,மத்திய வங்கியின் ஆளுநர் என்ற அடிப்படையில் அது எனது கடமை,இதன் காரணமாக நேர்மையற்ற விதத்தில் சிலருக்கு சாதகமாக நடந்துகொள்ள முடியாது,கூட்டாக முடிவுகள் எடுக்கப்படும்போது அதற்கு சாத்தியமில்லை, அநீதியான முடிவுகள் எடுக்கப்படுவதை தடுக்கும் விதத்திலேயே நடைமுறைகள் அமைந்திருக்கும். அது என்னுடைய கடமையில்லை என்பதை என்னால் உறுதியாக தெரிவிக்க முடியும்.

கேள்வி- திறைசேரி முறி தொடர்பில் குழப்பங்கள் ஏற்;படவில்லையா?பல தரப்பிலிருந்தும் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவே?

பதில்-சிலர் இந்த விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் என நான் மீண்டும் தெரிவிக்கின்றேன்.

கேள்வி- நீங்கள் மிகவும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளனவே ?

பதில்-நான் எனது பணிக்காக மாத்திரம் செலவுசெய்கிறேன்,இந்த குற்றச்சாட்டுகள் பிழையானவை, எனது வாழ்க்கை குறித்த குற்றச்சாட்டுகள் என்னவெள அறிய விரும்புகின்றேன்?

கேள்வி- இலங்கையின் மத்திய வங்கி ஆளுநரிற்கான உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தில் தங்காமல் ஆடம்பர ஹோட்டல்களில் நீங்கள் தங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவே?

பதில்-இலங்கையின் மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்ற பின்னர் நான் கொழும்பில் உள்ள எனது வீட்டில் தங்கியிருக்கின்றேன்,அலுவலக பணிகளிற்காக மத்திய வங்கி ஆளுநரிற்கான உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நான் பயன்படுத்துகிறேன்.

கேள்வி- வெளிநாடுகளிற்கு 38 தடவை சென்றிருக்கிறீர்களா?

பதில்-மத்திய வங்கியின் நிதியில் நான் வெளிநாடு சென்றிருந்தால்,ஆளுநரின் உத்தியோகபூர்வ பணிகளிற்காகவே நான் அவ்வாறு சென்றிருப்பேன்.

கேள்வி-ஓரு நேர உணவிற்காக 450,000 செலவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றதே?

பதில்-நாங்கள் இராஜதந்திரிகளிற்கு உணவுவழங்க வேண்டும்,எங்களின் நாளாந்த உணவை விட அவற்றின் விலை அதிகம் என்பதை தெரிவிக்கவேண்டியதில்லை, ஆனால் அவை ஓரு தருணங்களிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டவை, இது குறித்து ஏன் அலட்டிக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை?

கேள்வி-நீங்கள் 21 ஐரோப்பிய கோட்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றதே?
பதில்- எனது கோட்கள் இலங்கையில் பிரபலமாகிவிட்டன என்பது எனக்கு தெரியும்,ஆனால் அவற்றை மத்திய வங்கியின் செலவில் அதனை வாங்கவில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *