செய்திகள்

அரசுடன் இணைந்தால் 5 கோடியும் அமைச்சர் பதவியும் தருவதாக சொன்னார்கள்: அரியம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி அரசாங்கத்துடன் இணைந்துகொண்டால் அமைச்சர் பதவி ஒன்றும் 5 கோடி ரூபா பணமும், கொழும்பில் ஒரு வீடும் தருவதாக அரசாங்கம் தனக்குத் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு மாவட்ட எம்.பி. ப.அரியநேற்திரன் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 ஆசனங்களில் வெற்றிபெற்றிருந்தது. ஆனால், கிழக்கு மாகாண சிங்கள உறுப்பினர் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டார். அந்த சந்தர்ப்பத்தில் தன்னை அழைத்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, அரசாங்கத்துடன் வந்து இணைந்துகொள்ளுமாறு தன்னை அழைத்ததாக அரியநேத்திரன் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கத்துடன் வந்து இணைந்துகொண்டால் அமைச்சர் பதவியுடன் ஐந்து கோடி ரூபாவும், கொழும்பில் வீடு ஒன்றும் தருவதாக அமைச்சர் தனக்கு வாக்குறுதியளித்த அரயநேத்திரன் குறிப்பிடுகின்றார். இதற்குப் பதிலளித்த தான், எங்களுக்குக் கோடிகள் முக்கியமல்ல. கொள்கைதான் முக்கியம் எனத் தெரிவித்தாகவும் அரியநேத்திரன் கூறினார்.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அரியநேத்திரன் இத்தகவல்களை வெளியிட்டார்.