செய்திகள்

அரசு இன்று கல்விக்கு அதிக பணம் செலவிடுகிறது: அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன்

அரசாங்கம் இன்று கல்விக்கு அதிக பணம் செலவு செய்து வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் அவர்கள் மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொது வாசிகசாலை கட்டிடத்தை 24.05.2015 அன்று மக்களிடம் கையளிக்கும் வைபவத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

 மேலும் அவர் தெரிவிக்கையில்…

அரசாங்கம் அதிக படியான கல்விக்கு அக்கறை காட்டி வருவதும் பாடசாலைக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொள்வதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது பாராட்டதக்க விடயமாகும்.

அண்மையில் மலையக பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர் நியமனத்திற்கான விண்ணப்படிவங்கள் கோரிய போது பதினான்காயிரம் நபர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். இதில் பனிரெண்டாயிரம் பேர் சித்தி பெற்ற போதிலும் நேர்முக பரீட்சையின் போது ஒன்பதாயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டனர். இருந்தபோதிலும் இதிலும் அதிகமானவர்களுக்கு பொது அறிவுகள் இல்லாத சூழ்நிலை காணப்பட்டது ஒரு வேதனைக்குரிய விடயமாகும்.

இன்று அதிகமானவர்கள் பொது அறிவினை தேடிக்கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை. இதன் காரணமாகவே இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

எதிர்காலத்தில் எங்களுடைய சமூகத்தில் கற்கின்றவர்களும் பொது அறிவில் கூடிய அக்கறை செலுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

வடக்கு கிழக்கில் இன்று யுத்தம் முடிவுக்கு வந்த பின் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களுடைய காணி உரிமை, வீட்டு உரிமை பெற்றுக்கொள்வதில் அக்கறை காட்டுகின்றனர். இதன் காரணமாக இவர்களின் வேதனையை அறிந்த ஜனாதிபதி அவர்கள் அவர்களுக்கான காணி, வீடுகளை வழங்குவதில் மும்மரமாக செயல்பட்டு வருகின்றார்.

200 வருட காலமாக மலையக மக்கள் காணி வீட்டு உரிமை இல்லாமல் அடையாளம் இல்லாதவர்களாக வாழ்ந்து வந்தமை அனைவரும் அறிந்த உண்மையாகும்.

இன்று மலையக மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைக்கு ஜனாதிபதி அவர்கள் உறுதி மொழி வழங்கியதையடுத்து இன்று இவர்களுக்கான காணி மற்றும் தனி வீடு அமைக்கும் திட்டத்தினை செயல்முறைக்கு கொண்டு வந்துள்ளனர்.

எனவே எரித்காலத்தில் மலையக பகுதிகளில் மட்டுமல்லாமல் ஏனைய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

DSC09418 DSC09421 DSC09422 DSC09423 DSC09429 DSC09432