செய்திகள்

அரசு துன்புறுத்துகின்றதாம்: ஜெனீவா செல்லத் தயாரானும் எதிர்க்கட்சி

தமது கட்சியினர் மீது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்களுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப் போவதாக முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அனைத்து பாராளுமன்ற குழுவிடம் இந்த முறைப்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் துன்புறுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் அரச காவல்துறையாக செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு குறித்து முறைப்பாடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விரைவில் ஜெனீவா சென்று அனைத்து பாராளுமன்ற குழுவிடம் முறைப்பாடுசெய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சர்வதேச பாதுகாப்பு உண்டு என்பதனை தெளிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.