செய்திகள்

அரச ஊடகங்கள் இன்னமும் மாறவில்லை

ஊடக நிறுவனங்களின் தலைவர்களை மாற்றுவதால் மாத்திரம் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்திவிடமுடியாது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
தலைமைத்துவ மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் கொள்கை மாற்றங்கள் எதுவும் இடம்பெற்றுவிடவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சுனில் ஜெயசேகரா இதனை தெரிவித்துள்ளார்.
கொள்கை மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கம் எதிர்கொள்ளும் பாரிய சவால் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மாறிய பிறகும் அரச ஊடகங்களின் அணுகுமுறைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஊடன அமைச்சருடன் இது குறித்து ஆராய்ந்துள்ளதாகவும், மேலும் ஊடகதகவல் சுதந்திரம் தெர்டர்பாக தாங்கள் சமாப்பித்த யோசனைகளை அமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் அவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணையை மேற்கொள்வதற்கு அமைச்சர் இணங்கியதாகவும்,சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனையை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் சுனில் ஜெயசேகரா தெரிவித்துள்ளார்.