செய்திகள்

அரச ஊழியர்களின் பகல் உணவுக்கான ஓய்வு நேரம் 30 நிமிடமாக மட்டுப்படுத்தப்பட்டது

அரச ஊழியர்களின் பகல் நேர உணவு  ஓய்வு நேரத்தை 30 நிமிடங்களாக மட்டுப்படுத்துமாறு தெரிவித்து பொது நிருவாக மற்றும் உள்ளுராட்சி , மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரினால் சகல அரச நிருவன பிரதானிகளுக்கும் சுற்றுநிருபமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரச நிருவனங்களின் சேவையை நாடி செல்லும் பொது மக்களுக்கு விரைவானதும் , சிறந்ததுமான சேவையை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்திலேயே குறித்த சுற்று நிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை அரச நிறுவனங்களுக்கு கிடைக்கும் கடிதங்களுக்கு ஒரு வார காலத்துக்குள் பதில்களை வழங்க நடவடிக்கையெடுக்குமாறும் குறித்த கடிதம் எந்த மொழியில் இருந்ததோ அதே மொழியிலேயே பதில் கடிதமும் இருக்க வேண்டுமெனவும் அமைச்சினால் அரச நிறுவன பிரதானிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.