செய்திகள்

அரச ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு: சுற்றுநிருபம் விரைவில்!

அரச உத்தியோகத்தர்கள் அணியும் ஆடை தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை தயாரிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன குறிப்பிட்டார்.

பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்லும்போது சேலை அல்லது அலுவலகத்திற்கு ஏற்ற உடை அணியலாம் என்று ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சிலர் சுற்றறிக்கையின் முதல் பகுதியை மாத்திரம் அமுல்படுத்துவதாகவும், பொருத்தமான அலுவலக ஆடை என்றால் என்ன என்பதை மறந்து விட்டதாகவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தகுந்த அலுவலக உடையை அனுமதிக்க வேண்டும் என புதிய சுற்றறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டு, விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

-(3)