செய்திகள்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 400 பில்லியன் ரூபா கடன் பெறுவதற்கு அரசாங்கம் முயற்சி

அரச ஊழியர்களுக்கு இம்மாதத்துக்கான சம்பளத்தை வழங்குவதற்காக அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி 400 பில்லியன் ரூபாவை கடனாக பெற்றுக்கொள்ளும் வகையில் இன்று பாராளுமன்றத்தில் திறைச்சேரி உண்டியல் தொடர்பான விவாதமொன்றை நடத்தி அதனை அவசரமாக நிறைவேற்றும் முயற்சியினை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் இது தோற்கடிக்கப்படுமாக இருந்தால் அரச ஊழியர்களுக்கு தமிழ் , சிங்கள புத்தாண்டு துன்பமானதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடன் பெறாது நாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக வீராப்பு பேசி வந்த அரசாங்கம் இப்போது கடன் பெற முயற்சிப்பது வேடிக்கையாக இருப்பதாவும் அரசாங்கத்தில் எத்தனையோ பொருளாதார மேதைகள் இருக்கையில் கடன் இன்றி நாட்டை கொண்டு செல்ல முடியாது போய்விட்டதே என அவர் அரசாங்கத்துக்கு கிண்டல் அடித்துள்ளார