செய்திகள்

அரச ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் : சுற்றுநிருபம் வெளியிடப்பட்டது

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சகல அரச ஊழியர்களும் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் அடங்கிய சுற்று நிருபமொன்று பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி பொது மக்கள் தினமாக ஒதுக்கபபட்டுள்ள புதன் கிழமை நாட்களில் அரச ஊழியர்கள் அலுவலகங்களில் இருக்க வேண்டியது கட்டாயமாகும். அத்தடன் மக்களின் கடிதங்களுக்கான பதிலை ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும். அதேவேளை மக்களின் கடிதம் எந்த மொழியில் காணப்பட்டதோ அதே மொழியிலேயே பதிலும் அமைய வேண்டும்.
இதேவேளை பெருமளவு நிதி செலவில் மற்றும் அரச சொத்துக்களை பயன்படுத்தி நிகழ்வுகளுக்கும் தடை விதிக்ப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை மதிக்காது செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படும். என அந்த சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.