செய்திகள்

அரச மருந்தக கூட்டுத்தாபன விற்பனை நிலையங்களை தவிர ஏனைய மருந்தகங்களை உடன் மூடுமாறு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் மக்களின் நலன்கருதி அனைத்து ஒளடத நிலையங்களையும் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.மக்களின் நலன் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை கருத்திற்கொள்ளாத சிலர் இந்த ஒளடத நிலையங்களில் ஏனையப் பொருட்களையும் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்து அரச மருந்தக கூட்டுத்தாபன விற்பனை நிலையங்களை தவிர ஏனைய ஒளடத விற்பனை நிலையங்களையும் சொகுசு வர்த்தக நிலையங்களையும் உடன் மூடுமாறு பொலிமா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.

அத்துடன் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வீடுகளுக்கு விநியோகிப்பதற்காக சொகுசு வர்த்தக நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும், குறித்த வர்த்தக நிலையங்களை திறந்து வைத்து வர்த்தக நடவடிக்கைகள் முற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.இதனாலேயே பொலிஸ்மா அதிபர் இவற்றை மூடுமாறு தெரிவித்துள்ளதுடன் இவ்வாறு மூடாதிருக்கும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தெரிவித்துள்ளார்.(15)