செய்திகள்

அரச விளம்பரங்களில் முதலமைச்சர்களின் படங்களை பயன்படுத்தலாம் உச்ச நீதிமன்றம்

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் முதலமைச்சர்களின் படங்களை அரச விளம்பரங்களில் போட அனுமதிப்பதாக இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று (வெள்ளிக்கிழமை) விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் முதலமைச்சர்களின் படங்களை அரசு விளம்பரங்களில் போட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. குறித்த தடையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்து இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று வழங்கப்பட்டுள்ள உத்தரவின்படி, ஜனாதிபதி, பிரதமர், மாநில ஆளுனர்கள், முதலமைச்சர்கள் மற்றும் மத்திய-மாநில அமைச்சர்களின் படங்களை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வெளியாகும் அரசு விளம்பரங்களில் வெளியிடலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கான சட்ட மன்றத் தேர்தல் ஏப்ரல் 4ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிட்த்தக்கது.

N5