செய்திகள்

அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சைகளுக்கு செல்வோருக்கான அறிவித்தல்

நீரிழிவு , இரத்த அழுத்தம் , இருதய நோய் மற்றும் கொலோஸ்ரோல் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கா அரசாங்க கிளினிக்குகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நோயாளர்களுக்கு சுகாதார அமைச்சினால் முக்கிய அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அரச வைத்தியசாலைகளில் கிளினிக்குகள் குறிப்பிட்ட தினங்களில் நடைபெறுவதுடன் அதன்போது அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகள் விநியோகிக்கப்படும்.
நோயாளர்கள் தமது எச்சரிக்கைகளை கருத்திற்கொண்டு அவர்கள் அந்த கிளினிக்குகளுக்கு வர அவசியமில்லையென்பதுடன் , ஆரோக்கியமான பொறுப்பான நபரொருவரிடம் உங்களின் நோய் நிர்ணய அட்டையை (கிளினிக் புத்தகம்) அனுப்பி மருந்தை பெற்றுக்கொள்ள முடியும்.
ஏதேனும் காரணத்தினால் குறித்த தினத்தில் மருந்துகளை பெற்றுகக்கொள்ள முடியாது போனால் எந்தவொரு கிழமை நாட்களிலும் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அந்த மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும்.
நோய் நிர்ணய அட்டை அல்லது கிளினிக் புத்தகத்தை ஊரடங்கு சட்ட அமுலில் இருக்கும் காலத்தில் அனுமதி அட்டைகளாக பயன்படுத்த முடியுமென சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு பணிப்பாளர் தெதரிவித்துள்ளார்.
-(3)