செய்திகள்

அரிசி பாவனையை அதிகரிக்கவே பாணின் விலை அதிகரிக்கப்பட்டதாம் : நிதி அமைச்சர் கூறுகிறார்

மக்களை அதிகமாக அரிசி பாவனைக்கு ஊக்குவிக்கும் வகையிலேயே பாணின் விலையை அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று முதல் பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மொரட்டுவ பகுதியில் விகாரையொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாம் மக்களை அரிசி பாவனைக்கு ஊக்குவிக்கவே முயற்சிக்கின்றோம். ஜனாதிபதியும் மற்றும் பிரதமரும் மக்களை கோதுமை பாவனையிலிருந்து விடுவித்து  அரிசி பாவனைக்கு பழக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். இதில் ஓர் அங்கமாகவே பாண் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.
n10