செய்திகள்

அரியாலையை சேர்ந்த நால்வர் முழுமையாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பவுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வெலிகந்தை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் அரியாலையைச் சேர்ந்த நால்வர் பூரண குணமடைந்துள்ளனர் என்று யாழ் போதனா வைத்தியசாலை பணப்பாளர் த.சத்தியமூர்த்தா தெரிவித்துள்ளார்.அரியாலையைச் சேர்ந்த நான்கு பேரே இவ்வாறு முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பும் அவர்களை வெலிகந்தையிலிருந்து அம்புலன்ஸில் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அவர்கள் வீடுகளுக்கு திரும்பினாலும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு வீட்டிலேயே இருப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதன்படி குறித்த நால்வரும் இன்று மாலை விடுவிக்கப்பட்டு அவரவர் வீடுகளுக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(15)