செய்திகள்

அரியாலை ஆராதனைக்கு சென்று தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் மறைந்திருப்பவர்களை உடனடியாக பதிவு செய்யுமாறு அறிவித்தல்

யாழ்ப்பாணம் – அரியாலை பிலதெல்பியா தேவாலய ஆராதனைக்கு சென்று இதுவரை தனிமைப்படுத்தலுக்குச் உட்படாமல் மறைந்திருப்பவர்கள் தங்கள் உடனடியாக பதிவு செய்யுமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கோரியுள்ளார்.பண்ணைப் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் பூசை ஆராதனையில் கலந்துகொண்டு தங்களை இனங்காட்டாது மறைந்து இருப்பவர்களும் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அல்லது அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரியப்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.இதேவேளை தற்போது குறித்த தேவாலயத்திற்குச் சென்று இன்றுவரை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சிலர் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இவ்வாறு, இருப்பவர்கள் பற்றிய தகவல்களை எமக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதோடு அவர்கள் தாமாக முன்வந்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தார்.(15)