செய்திகள்

அருள்நிதிக்கு ஜூனில் திருமணம்

திமுக தலைவர் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசுவின் மகனும், நடிகருமான அருள்நிதிக்கு திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்தேறியது. சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மகள் கீதனாவை அருள்நிதி மணக்கிறார். திங்கள்கிழமை நடைபெற்ற இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், முக அழகிரி உள்பட கருணாநிதி குடும்பத்தினர் பங்கேற்றனர். கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரும் பங்கேற்றனர்.