செய்திகள்

அரைச்சொகுசு பஸ் சேவைகள் சாதாரண சேவையாக மாற்றப்படும்

அரைச் சொகுசு பஸ் சேவையை சாதாரண பஸ் சேவையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் டி. எஸ். ஜெயவீர தெரிவித்தார்.

அரைச் சொகுசு பஸ்களில் ஒன்றரை வீத கட்டணம் அறவிடப்பட்ட போதும் உரிய சேவை வழங்கப்படுவதில்லை என பயணிகள் தரப்பில் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து அரைச் சொகுசு பஸ்களை அடையாளம் கண்டு அவற்றை சாதாரண சேவையாக மாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தூர சேவையில் ஈடுபடும் 27 அரைச் சொகுசு பஸ்கள் இதுவரை அடையாளங் காணப்பட் டுள்ளன. அவற்றிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதோடு அவற்றின் அனுமதிப் பத்திரத்தை ரத்துச் செய்யாது சாதாரண சேவையாக இதனை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.