செய்திகள்

அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி

2015 உலககிண்ணத்தின்மற்றொரு காலிறுதியாட்டத்தில் பங்களாதேஷை 109 ஓட்டங்களால் தோற்கடித்து இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
மெல்பேர்னில் இன்று இடம்பெற்ற பகலிரவு ஆட்டத்தில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பபெடுத்தாட தீர்மானித்து ரோகித் சர்மாவின் அபாரமான சதத்தின் உதவியுடன் 302 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி மூன்று விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களை ஓரு கட்டத்தில் பெற்றிருந்த போதிலும் ரெய்னா- ரோகித்சர்மா ஜோடி மிகவேகமாக பெற்ற 122 ஓட்டங்களின் உதவியுடன் அணி வலுவான நிலைக்கு திரும்பியது.
ரெய்னா 57 பந்துகளில் 65ஓட்டங்களை பெற்றஅதேவேளை ரோகித் சர்மா 126 பந்துகளில் 14 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடங்கலாக 137 ஓட்டங்களை பெற்றார்.ஜடேஜா 10 பந்துகளில் 23 ஓட்டங்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
பங்காதேஷ் அணி சார்பில் தஸ்கின் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
வெற்றிபெறுவதற்கு 303 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்காளதேஸ் அணி 45 ஓட்டங்களில் 193 ஓட்டங்களை பெற்று உலககிண்ண போட்டிகளிலிருந்து வெளியேறியது.இந்திய அணி சார்பில் உமேஸ் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.