செய்திகள்

அர்ஜுன ரணதுங்க ஐ.தே.கவில் இணைய தீர்மானம்?

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளரும் துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சருமான  அர்ஜுன ரணதுங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்பினரிடமிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னால் அந்த கட்சியில் போட்டியிட முடியாது எனவும் இதனால் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான தனது அறிவிப்பை அவர் எதிர்வரும் நாட்களில் வெளியிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.