செய்திகள்

‘அறிக்கை ஒத்திவைப்பு அரசுக்கு பெரு வெற்றி’: மைத்திரி பெருமிதம்

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்­தினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள இலங்கை குறித்த அறிக்கை ஆறு மாதங்­க­ளுக்கு பிற்­போ­டப்­பட்­டுள்­ளமை புதிய அர­சாங்கம் பெற்­றுக்­கொண்ட பாரிய வெற்­றி­யாகும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் தனக்கு எந்­த­வி­த­மான உடன்­ப­டிக்­கையும் இல்லை என்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மிக நீண்ட ஆயுட் காலத்­துக்­காக கசப்­பான உண்­மை­களை பேச­வேண்­டி­யுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

கட்­டு­நா­யக்­கவில் கடந்த சனிக்­கி­ழமை மற்றும் ஞாயிற்­றுக்­கி­ழமை தினங்­களில் நடை­பெற்ற இரண்­டுநாள் செய­ல­மர்வில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற அமர்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில், “ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அல­வ­ல­கத்­தினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள இலங்கை விவ­கா­ரம குறித்த அறிக்கை ஆறு எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் வரை பிற்­போ­டப்­பட்­டுள்­ளமை புதிய அர­சாங்கம் பெற்­றுக்­கொண்ட பாரிய வெற்­றி­யாகும்.

புதிய அர­சாங்­கத்தின் அர்ப்­ப­ணிப்பு உள்­ளக பொறி­முறை உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­க­ளினால் சர்­வ­தேசம் இந்த நம்­பிக்­கையை வைத்­துள்­ளது. அதன்­மூலம் புதிய அர­சாங்­கத்தின் கோரிக்­கைக்கு சர்­வ­தேசம் செவி­சாய்த்­துள்­ளது.

இதே­வேளை ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் தனக்கு எந்­த­வி­த­மான உடன்­ப­டிக்­கையும் இல்லை. யதார்த்­த­பூர்­வ­மான விட­யங்கள் எப்­போதும் இனி­மை­யாக இருக்­காது. ஆனால் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மிக நீண்ட ஆயுட் காலத்­துக்­காக கசப்­பான உண்­மை­களை பேச­வேண்­டி­யுள்­ளது.

சுதந்­திரக் கட்­சியில் மாற்றம் வர­வேண்டும் என்­ப­தற்­கா­கவே கடந்த தேர்­தலில் மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே அந்த மாற்றத்துக்கு ஏற்ப செயற்படாவிடின் சுதநதிரக் கட்சி எதிர்வரும் 10 முதல் 15 வருடங்களுக்கு எதிர்க்கட்சியில் இருக்கவேண்டிய நிலை ஏற்படும் என்றார்.